துணிகளில் ஒட்டி இருக்கும் கறையை எளிமையான முறையில் எப்படி நீக்குவது என்பதை, இந்த பதிவில் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லத்தரசிகளுக்கு இந்த குறிப்பு மிக மிகப் பயனுள்ளதாக இருக்கும்.
வீட்டில் துணி துவைப்பது என்பது பலருக்கும் மிக சிரமமான வேலையாக தான் தோன்றும். ஒரு பெரிய குடும்பத்தில் துணி துவைத்து முடிக்கவே நீண்ட நேரமாகும். இன்றைய காலத்தில் என்னதான் வாஷிங் மெஷின் மூலம் துணி துவைத்து பார்த்தாலும், அதில் ஒட்டி இருக்கும் கறை மட்டும் போகவே போகாது. இதனால் சில நாட்களிலேயே உங்களின் புது துணிகளை நீங்கள் தூக்கி குப்பையில் போட வேண்டியிருக்கும். அப்படி, ஏதும் இல்லாமல் உங்கள் துணிகளில் படிந்துள்ள கறையை எப்படி சுலபமான முறையில் போக்குவது என்பதை தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
முதலில் சாயக் கறை படிந்த துணிகளை எப்படி சுத்தம் பண்றதுன்னு பாப்போம். முதலில் அதற்கு ஒரு பாத்திரத்தில் துணி முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா, 2 டீஸ்பூன் வினிகர் சேர்த்து கொள்ளுங்கள்.
இந்த பேக்கிங் சோடாவும், வினிகரும் சேர்ந்த தண்ணீரில் சாய கறை படிந்த துணியை ஒரு அரை மணி நேரம் போட்டு ஊற வைத்து விடுங்கள். அதன் பிறகு எடுத்து அந்த சாயம் உள்ள பகுதியில் குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப்பு, நீங்கள் உபயோகிக்கும் எந்த சோப்பாக இருந்தாலும் சரி அதை பயன்படுத்தி கறை உள்ள இடத்தில் லேசாக தேய்த்தாலே போதும். சாயக்கறை அனைத்தும் காணாமல் போய் துணி பழைய நிறத்திற்கு வந்து விடும்.
துணிமணிகளில் இருக்கும் விடாபடியான மஞ்சள் கறை நீக்குவதற்கு, கொஞ்சம் எலுமிச்சை சாற்றை அதில் தேய்த்துக் கொள்ளுங்கள். பத்து நிமிடம் ஊறவிட்டு நன்கு சோப்பு போட்டு தேய்த்தால் போதும், மஞ்சள் கறை போயே போய்விடும். எப்படியான நாள்பட்ட கறையாய் இருந்தாலும், அரை மணி நேரம் ஊற வைத்து தேய்த்து பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும்.
அதேபோன்று, வெள்ளை சட்டையில் கிறுக்கல் இருந்தால், எவ்வளவு விலை உயர்ந்த சட்டையாக இருந்தாலும், நாம் பயன்படுத்த முடியாமல் போகும். இது போன்ற கடினமான கறைகளை லைசால் கொண்டு எளிமையாக நீங்கி விட முடியும்.
அதற்கு முதலில், கறை படிந்த இடத்தில் கொஞ்சம் பேக்கிங் சோடா போட்டு அதன் மேல் சிறிதளவு லைசாலை ஊற்றி விடுங்கள். லைசால் நன்றாக ஊறிய பிறகு துணி துவைக்கும் பிரஷ் கொண்டு அந்த இடத்தில் தேய்த்தால் போதும். அப்படி இல்லையென்றால், உங்கள் வீட்டில் ஏதாவது வேஸ்ட் டூத்பிரஷ் இருந்தால் அதை கொண்டு லேசாக அந்த இடத்தை மட்டும் தேய்த்து விட வேண்டும்.
அதன் பிறகு அதனை துவைத்து பார்த்தால், கறை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். இதன் பிறகு அந்த துணிகளை எப்போதும் போல் தண்ணீரில் சோப்பு பவுடர் போட்டு இதனுடன் கூடவே ஒரே ஒரு ஸ்பூன் கல் உப்பையும் சேர்த்து ஊற வைத்து எடுத்து விடலாம். துணியின் நிறமும் மங்காது கறையும் மறைந்துவிடும்.