அனுபவித்தவனை அலறவிட்ட விமான பணிப்பெண்..
07 Oct,2022
.
தன்னை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை அறையில் பூட்டி வைத்து இளம் பெண் போலீசில் ஒப்படைத்து சம்பவம் நடந்துள்ளது. பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபர் அரசியல்வாதியின் மகன் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தன்னை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை அறையில் பூட்டி வைத்து இளம் பெண் போலீசில் ஒப்படைத்து சம்பவம் நடந்துள்ளது. பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபர் அரசியல்வாதியின் மகன் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதை தடுக்க அரசும் காவல்துறையும் எத்தகைய நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, ஏமாற்று பேர்வழிகளிடம் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது, ஆனாலும் அவர்களின் பாசவலைக்கு பெண்கள் அடிமையாகி தங்களையே பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால் சில நேரங்களில் பெண்கள் விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருகின்றனர். இதுபோன்ற ஒரு சம்பவம் தெற்கு டெல்லியில் நடந்துள்ளது.\
முழு விவரம் பின்வருமாறு:- தெற்கு டெல்லி மெஹ்ராலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர் 30 வயது இளம் பெண், இவர் விமான பணிப் பெண்ணாக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இவருக்கு கான்பூர் சேர்ந்த ஹர்ஜித் யாதவர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஹர்ஜித் உள்ளூர் அரசியல்வாதியின் மகன் ஆவார், இந்நிலையில் அந்தப் பெண் ஹர்ஜித் சிங்குடன் நட்பாக பழகி வந்தார். ஞாயிற்றுக்கிழமை அப்பெண்ணின் வீட்டிற்கு ஹர்ஜித் சிங் மதுபோதையில் வந்தார்.
அப்போது நண்பன் என்ற அடிப்படையில் அந்த பெண் ஹர்ஜித் சிங்கை வீட்டிற்குள் அனுமதித்தார், அப்போது திடீரென கதவைப் தாழிட்ட ஹர்ஜித் சிங் அந்தப்பெண்ணை தோழி என்றும் பாராமல் கதற கதற பாலியல் பலாத்காரம் செய்தார், அந்த இளைஞனிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் போராடினார், ஆனால் முடியவில்லை, ஹர்ஜித் சிங்கிடம் தனது கற்பை இழந்த அந்த பெண், மதுபோதையில் இருந்த அர்ஜித் சிங்கை பழிவாங்க முடிவு செய்தார், இதனால் நைசாக பேசி ஹர்ஜித் சிங்கை அறைக்குள் தள்ளி தாழிட்டார்.
தான் அறையில் பூட்டப்பட்டதை உணர்ந்த அந்த இளைஞர், கதவை திறக்கும்படி கெஞ்சி கதறினார், ஆனால் அந்தப் பெண் 112 என்ற அவசர எண்ணுக்கு அழைத்தார் தனக்கு நடந்த சம்பவத்தை குறித்து அவர் கூறினார், சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் வீட்டிற்கு போலீசார் விரைந்து வந்தனர். அறையிலிருந்த ஹர்ஜித் சிங்கை கைது செய்தனர். 376 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது, மேலும் 323 பெண்ணை மானபங்கம் படுத்துதல், காயப்படுத்துதல், 509 பெண்ணின் மாண்பை அவமதித்தது, ஆபாச வார்த்தை, ஆபாச சைகை, 377 இயற்கைக்கு மாறான உறவு பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.