இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி நாம் நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருப்போம், ஒருவரது இதய ஆரோக்கியத்தை சரிவர கவனிப்பது அவரது நீண்ட நாள் வாழ்விற்கு உதவுகிறது.
ஒருவரது உடலில் முக்கியமான உறுப்பு என்றால் அது இதயம் தான், இதயம் துடிப்பது நின்றுவிட்டால் அவ்வளவு தான். இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றி நாம் நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருப்போம், ஒருவரது இதய ஆரோக்கியத்தை சரிவர கவனிப்பது அவரது நீண்ட நாள் வாழ்விற்கு உதவுகிறது, அதனால் நாம் எப்பொழுதும் நம்முடைய ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். கடினமான நெஞ்சு வலி ஏற்பட்டால் மட்டும் தான் சிலர் இதயத்தை பற்றியே அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள், ஆனால் கடுமையான வலி மட்டுமல்ல பல்வேறு விதமான உணர்வுகள் ஏற்படுகிறது, அதை நாம் கண்டுகொள்வதில்லை. சிலசமயம் நெஞ்சில் ஏற்படும் ஒருவகையான அழுத்தம், அசௌகரியமான உணர்வு, எரிச்சல், இறுக்கம் அல்லது ஒருவித வலி போன்றவற்றால் நாம் குழப்பமடைகிறோம். சரியான நேரத்தில் நாம் நமக்கு இருக்கும் ஆரோக்கிய சிக்கல்களை சரிபார்த்து கொள்வது சிறந்தது, இப்போது சில முக்கியமான அறிகுறிகளை காண்போம்.
மேலும் படிக்க | பளபளக்கும் தோலை கெடுக்கும் உணவுகள் இவை; இளமை பராமரிக்க தவிர்த்துவிடுங்கள்
1) நீங்கள் ஓய்வெடுக்கும் சமயத்திலோ அல்லது ஏதேனும் வேலை செய்யும்போதோ நெஞ்சு பகுதியில் ஒருவித வலியுணர்வு, இறுக்கம் அல்லது அழுத்தம் ஏற்பட்டால் கவனிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இது சில சமயம் உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட வழிவகுக்கும்.
2) இதய நோய்க்கான முக்கிய அறிகுறிகளில் ஒன்று இடதுபக்க தோள்பட்டையிலிருந்து அந்த பகுதி முழுவதும் உடலில் வலி ஏற்படும் அதிலும் குறிப்பாக கைகளில் வலி ஏற்படும். இது மாரடைப்புக்கான முக்கிய அறிகுறி.
3) திடீரென்று உங்களால் செயல்பட இயலாதது போன்ற உணர்வு அல்லது திடீரென்று தலைசுற்றல் போன்றவை ஏற்பட்டால் உங்கள் இதயத்தால் ரத்தத்தை சரியாக பம்ப் செய்யமுடியவில்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கும்.
4) தொண்டை அல்லது தாடையில் ஏற்படும் வலியானது இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடையது இல்லையென்றாலும் சில சமயங்களில் நெஞ்சு வலியானது தொண்டை அல்லது தாடி வலிகளாகவும் மாறலாம்.
5) எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும்போதோ அல்லது தூங்கும்பொழுதோ அதிகமாக வியர்த்தால் அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும்.
மேலே கூறியது போன்ற உணர்வுகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது, இந்த அறிகுறிகள் மட்டுமின்றி சிலருக்கு வாந்தி, செரிமானமின்மை, கால் அல்லது கைகளில் வலியுணர்வு, மூச்சு திணறல், கணுக்கால்களில் வீக்கம், அதிக சோர்வு போன்றவை ஏற்படுவதும் இதய ஆரோக்கியம் மோசமாக உள்ளதை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும்.