சிகிச்சையளிக்க வேண்டும் என்றால் பாலியல் உறவு ...! அரை நிர்வாணமாக மாட்டிகொண்ட பிரபல டாக்டர்
27 Sep,2022
டாக்டர் அவரது வழக்கறிஞர் மூலம், நான், நூற்றுக்கணக்கான பெண்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளேன் என கூறி உள்ளார். ரோம் இத்தாலிய மகப்பேறு மருத்துவர் கியோவானி மினியெல்லோ (60 வயது) இவரை டாக்டர் மேஜிக் புளூட் என்று செல்லமாக அழைப்பார்கள் . குழந்தை பாக்கியம் இல்லை என்று செல்லும் பெண்களை ஓட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் உறவு வைத்து கொள்வார். இவ்வாறு அன்னா மரியா என்ற பெண்ண ஓட்டலுக்கு அழைத்துச் சென்று ‘தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்’ என்று கூறி அந்தப் பெண்ணை
பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். உண்மையில் அந்தப் பெண் தனக்கு குழந்தைப் பேறு இல்லை என்று வந்துள்ளார் அவரிடம் டாக்டர் கியோவானி, ஹியுமன் பாபிலோனா வைரஸ், அதாவது பாலியல் ரீதியாக தொற்றிய டிஎன்ஏ வைரஸ் என்று கூறி அந்தப் பெண்ணை பயமுறுத்தியுள்ளார், பிற்பாடு பரிசோதனையில் அப்படி எதுவும் இல்லை என்ற உண்மை தெரிந்துள்ளது. வைரஸ் தொற்றியுள்ளதாக அவரை பயமுறுத்திய டாக்டர் கியோவானி, குழந்தை பிரச்சினைக்குத் தீர்வு தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதுதான் என்று கூறியுள்ளார். அந்தப் பெண்ணுக்கு சந்தேகம்
ஏற்பட சட்ட ஆலோசனை செய்துள்ளார். பிறகு டாக்டருடனான உரையாடல் அனைத்தையும் ரெக்கார்ட் செய்து பிறகு அதனை தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்துள்ளார். Also Read - பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் சிங்கப்பூர்... "மீளுமா இலங்கை..?" இதை தொடர்ந்து லெ லீன் என்ற புலனாய்வு நிகழ்ச்சி மூலம் டாக்டரின் பாலியல் லீலைகளை வெளிக்கொண்டுவர முடிவு செய்தது. அதன்படி தன் பெண் பத்திரிகையாளரை ரகசிய கேமராவுடன் அந்த டாக்டர் கியோவானி மினியெல்லோவிடம் அனுப்பியது. அந்தப் பெண் டிவி நடிகை டாக்டர் கியோவானியை சந்தித்து உள்ளார். அவரிடமும் டாக்டர் அதே பாலியல்
‘சிகிச்சை’யை பரிந்துரை செய்தார். ஓட்டல் அறைக்கு அழைத்ததோடு, தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டால் உடல் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் ஏனெனில் தான் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பிறகு தன் உடைகளைக் களைந்துள்ளார் டாக்டர். அப்போது தொலைக்காட்சி நிருபர் உள்ளே புகுந்து அரைநிர்வாண 60 வயது டாக்டரை கையும் களவுமாகப் பிடித்துள்ளார். கையும் களவுமாகப் பிடிப்பட்டும், நான் ஆய்வுக்காகத்தான் இதைச் செய்கிறேன். பிறரையும் நான் இதுபோல் காப்பாற்றியிருக்கிறென்” என்று கூறி உள்ளார்.
விசாரணையில் டாக்டர் சுமார் 15 பெண்களிடம் இவர் தன் கைவரிசையைக் காட்டியதும் அம்பலமாகியுள்ளது.15 பெண்கள் முன் வந்து, டாக்டரால் பாதிக்கப்பட்டதாகவும், அவரது அதிசயமான பாலியல் சிகிச்சையால் தாங்களும் பாதிக்கப்பட்டதாகக் கூறி உள்ளனர். டாக்டர் அவரது வழக்கறிஞர் மூலம், நான், நூற்றுக்கணக்கான பெண்களுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளேன் ... ஒரு மாற்று சிகிச்சையை மட்டுமே நான் பரிந்துரைக்கிறேன். அது பலனைத் தந்தது," என்று கூறினார்.