லண்டன்: பிரிட்டன் நாட்டில் மகனுடன் தனியாக வசித்து வந்த தாய்க்கு வினோதமான ஒரு காரணத்திற்காக அபராதம்
விதிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக நம்ம ஊர்களில் சத்தமாகப் பாட்டுக் கேட்டு பார்டி செய்தார்கள் என போலீஸ் நிலையங்களுக்குப் புகார்கள் போகும்.
இதுபோன்ற கேஸ்களில் பெரும்பாலும் பிரபலங்கள் தான் சிக்குவார்கள்.
ஆனால், பிரிட்டன் நாட்டில் பலான காரணத்திற்காகச் சத்தம் போட்டு போலீசாரிடம் பெண் ஒருவர் மாட்டி உள்ளார். போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவர் போட்ட பிளானும் பெரியதாக கைகொடுக்கவில்லை.
பிரிட்டன்
பிரிட்டன் நாட்டின் ரெக்ஸ்ஹாம் என்ற பகுதியில் வசித்து வருபவர் கிறிஸ்டின் மோர்கன்.
41 வயதாகும் இவர், தனது மகனுடன் வீட்டில் வசித்து வருகிறார்.
இருப்பினும், இவரது வீட்டில் இருந்து இருந்து இரவு நேரங்களில் திடீர் திடீரென சத்தமாக ஒலி வருமாம்!
அதுவும் காதிலேயே கேட்க முடியாத மாதிரியான சத்தங்கள் எல்லாம் வருமாம்.
இதனால் அக்கம் பக்கத்தில் குழந்தைகள் உடன் இருப்பவர்கள் நொந்து போய்விட்டனர்.
முதல் புகார்
இது தொடர்பாகக் கடந்த 2020ஆம் ஆண்டிலேயே இவரை எச்சரித்து உள்ளனர். அப்போது சத்தமாகப் பாட்டுக் கேட்டதாகப் புகார்கள் வந்தன. இதையடுத்து சத்தத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இருப்பினும், இதையெல்லாம் கிறிஸ்டின் மோர்கன் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
கண்டுகொள்ளவில்லை
இது மட்டுமின்றி பல நாட்களில் அவர் தனது பாய் பிரண்ட்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டு இருக்கிறார். அப்போது அவர் போடும் சத்தம் தான் பக்கத்து வீட்டுக் காரர்களின் தூக்கத்தைக் கெடுத்து உள்ளது. கிறிஸ்டின் மோர்கனின் வீடு மிக மெல்லச் சுவர்களை கொண்டு இருந்ததால் தனிமையில் அவர்கள் போடும் சத்தங்கள் அப்படியே பக்கத்து வீடுகளுக்கும் கேட்டுள்ளன.
குழந்தைகள் இருப்பதால் சத்தத்தை குறைத்துக் கொள்ளுமாறு அவர்கள் வைத்த கோரிக்கையையும் கிறிஸ்டின் மோர்கன் கண்டுகொள்ளவில்லை.
அதிக சத்தம்
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்து உள்ளனர். போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்ப தனது மகனும் அவரது கேர்ள் பிரண்டும் தான் இப்படியெல்லாம் செய்து வருவதாகச் சமாளித்து உள்ளார்.
இருப்பினும், விசாரணையில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சத்தம் போடுவதைக் குறைக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்ட எச்சரிக்கை கடிதத்தைப் பின்பற்றவில்லை என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.
வழக்கு
இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. பல முறை சொல்லியும் அவர் சத்தத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை என்றும் சுவரையும் கடினமானதாக மாற்றவில்லை என்று புகார்தாரர்களின் வழக்கறிஞர் வாதிட்டார்.
மேலும், அண்டை வீடுகளில் நாய்ஸ் மானிட்டர் நிறுவப்பட்டதாக்கவும் அதில் மிக உரைத்த சத்தங்கள் வருவது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தூக்கம் தொலைத்தனர்
தூக்கம் தொலைத்தனர்
மேலும், அவர், “பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் தொடர்ச்சியாகச் சத்தமான உரத்த சத்தத்தை ஏற்படுத்தி வந்தார்.
அண்டை வீட்டில் இருந்தவர்களின் உடல்நலம் இதனால் பாதிக்கப்பட்டது. அவர்கள் இது மிகவும் கொடுமையானது.
சொந்த வீட்டிலேயே அவர்களால் இரவு நேரங்களில் நிம்மதியாக இருக்க முடியாமல் போனது.
போதிய வாய்ப்புகள் கொடுத்தும் அவர் தவறை திருத்திக் கொள்ளவில்லை” என்று வாதிட்டுள்ளார்.
குட்டு
அந்த பெண் தான் தந்தை, மகன் மற்றும் மகளுடன் வசித்து வருவதாகவும் வேண்டுமென்றே சத்தத்தை ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை என்பது ஒருவரது உரிமை தான் என்றாலும் கூட மெல்லிய சுவர்கள் இருப்பதால் இது அண்டை வீட்டாருக்குப் பிரச்சினை தருவதாக உள்ளதாகத் தெரிவித்து இதில் அந்த பெண்ணுக்கு 300 பவுண்டு அபராதம் விதித்தனர்.