மர்மமான முறையில் கரை ஒதுங்கிய 230 திமிங்கலங்கள் !
22 Sep,2022
அவுஸ்ரேலியாவில் அமைந்துள்ள டாஸ்மேனியா என்ற தீவில் தான் இப்படியொரு அதிர்ச்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
230 திமிங்கலங்கள் திடீரென இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளது. இதே போன்று 2 வருடங்களுக்கும் முன் இவ்வாறு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவற்றில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களில் பாதி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
எனவே, திமிங்கலங்களை உயிருடன் மீட்டு மீண்டும் கடலுக்கு அனுப்புவதற்காக அவுஸ்ரேலியா மீட்பு குழு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றது.