43 ஆண்டுகளில் 53 பெண்களை திருமணம் செய்த நபர்.. காரணம் என்ன தெரியுமா..!
18 Sep,2022
53 பெண்களை திருமணம் செய்த நபர்53 பெண்களை திருமணம் செய்த நபர்
ஒரு நபர் 53 பெண்களை திருமணம் செய்த வினோத சம்பவம் சவுதி அரேபியாவில் நிகழ்ந்துள்ளது.
சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் அபு அப்துல்லா. 63 வயதான அபு அப்துல்லா 'இந்த நூற்றாண்டின் அதிக பலதார திருமணம் செய்த நபர்' என்ற பட்டப் பெயரை பெற்றுள்ளார். ஆம் தனது 20ஆவது வயதில் முதன் முதலாக திருமண வாழ்க்கையை தொடங்கிய அபு அப்துல்லா இதுவரை 53 பெண்களை திருமணம் செய்துள்ளார்.
அந்நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான அப்துல்லா தனது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காகத்தான் இத்தனை முறை திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் முதன் முதலாக 20 வயதில் திருமணம் செய்துகொண்டேன். முதல் திருமணம் செய்த போது நான் அடுத்த ஒரு திருமணம் செய்ய வேண்டும் என நான் எண்ணியதில்லை.
காரணம் முதல் மனைவி மற்றும் அவள் மூலம் பெற்ற குழந்தைகளுடன் நான் நிறைவாக வாழ்ந்து வந்தேன். ஆனால், 3 ஆண்டுகள் கழித்து எங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வரத் தொடங்கியது. எனவே, எனது 23ஆவது வயதில் நான் இன்னொரு திருமணம் செய்ய விரும்பி அதை மனைவியிடமும் கூறிவிட்டேன் என்றார். பின்னர் இரண்டாவது திருமணம் செய்த பின்னரும் அதில் நிறைவு, நிம்மதி கிடைக்காமல் மூன்று நான்கு ஐந்து என 43 ஆண்டுகளில் 53 பெண்களை இதுவரை திருமணம் செய்துள்ளார் அப்துல்லா.
இவர் திருமணம் செய்துகொண்டு பெரும்பாலான பெண்கள் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இவர் தொழிலதிபர் என்பதால் தனது எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள வெளிநாடுகளுக்குச் சென்று தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது அங்கு சில வெளிநாட்டுப் பெண்களையும் மணந்துள்ளார் அப்துல்லா. தனது வாழ்க்கை அனுபவம் குறித்து கூறும் அப்துல்லா, எல்லா மனிதர்களும் ஒரு பெண்ணுடன் தான் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்த வேண்டும் என விரும்புவார்கள்.
இளம் வயது பெண்களிடம் நிலைத்த தன்மையை பெற முடியாது. வயது முதிர்ந்த பெண்களிடம் தான் நிலைத்தன்மை கிடைக்கும் என்றார். இவர் தனது 52 மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டு தற்போது கடைசியாக திருமணம் செய்த மனைவியுடன் மட்டுமே வாழ்ந்து வருகிறார். புதிதாக இனி யாரையும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என்கிறார் 63 வயது அப்துல்லா.