சூப்பரான தயிர் சிக்கன் கிரேவி
17 Sep,2022
தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ
எண்ணெய்/நெய் - 5 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 பெரிய துண்டு
பெரிய வெங்காயம் -
2 பச்சை மிளகாய் -
3 இஞ்சி பூண்டு பேஸ்ட்
- 2 டேபிள் ஸ்பூன் தயிர்
- 1 கப் உப்பு -
சுவைக்கேற்ப மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்
+ 1 டீஸ்பூன் சீரகத் தூள் -
2 டீஸ்பூன் மிளகாய் தூள் -
2 டீஸ்பூன் கரம் மசாலா -
2 டீஸ்பூன் காய்ந்த வெந்தய கீரை
- 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி - ஒரு கையளவு
செய்முறை: * கொத்தமல்லி தழை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். * ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கனை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சிக்கன் ஒரு பதத்திற்கு வெந்ததும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். * பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும். * பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். * பின்பு அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும். * பிறகு அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும். * பின் அதில் சிக்கனை சேர்த்து, சிக்கனில் மசாலா நன்கு ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும். * பின்னர் அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 20 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும். * சிக்கன் நன்கு வெந்ததும், அதில் காய்ந்த வெந்தய கீரை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான தயிர் சிக்கன் கிரேவி தயார்.