பூமியை நோக்கி அதிவேகமாக வரும் விண்கல்..!- என்ன பாதிப்பு ஏற்படும்?
13 Sep,2022
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பூமியை நோக்கி விண்கல் ஒன்று வேகமாக நகர்ந்து வருவதை கண்டறிந்துள்ளது.
பூமியை தாண்டி விண்வெளியில் வியாழன், சனி கோள்கள் இடையே ஒரு கார் சைஸ் தொடங்கி 500 கிமீ நீளம் வரை உள்ள ஏராளமான விண்கற்கள் (Asteroid Belt) சுற்றி வந்துக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் வியாழன் மற்றும் சனி கிரகங்களின் அதீத ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு அவற்றினூடே விண்வெளியில் சூரியனை வலம் வந்தபடி உள்ளன.
இந்த விண்கற்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தீவிரமாக கண்காணித்து வருகின்றது. இந்நிலையில் ஆர்.க்யூ 2022 என்ற விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மணிக்கு 49,536 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த விண்கல் இந்த ஆண்டில் பூமியை கடந்து செல்ல வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு அருகே 37 லட்சம் கி.மீ அருகாமையில் கடக்கும் இந்த விண்கல் பூமியில் மோத வாய்ப்பில்லை என்றும், எனினும் அது கடந்து செல்லும் வரை தொடர்ந்து கண்காணிப்பு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.