பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பியூன்ஸ கைது செய்து விசாரிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
12 Sep,2022
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பியூன் அந்த மாணவியை வீடியோ காலில் ஆடைகளை கழற்ற சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பியூன் அந்த மாணவியை வீடியோ காலில் ஆடைகளை கழற்ற சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் கிராண்ட் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 35 வயதான நபர் ஒருவர் பியூனாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவியிடம் நட்பாக பழகி வந்துள்ளார். பள்ளியின் பியூன் என்ற ரீதியில் அந்த மாணவியும் அவருடன் நட்பாக பழகி வந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து அந்த மாணவியை பலமுறை கழிவறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். அதுமட்டுமின்றி வெளியே சொல்ல கூடாது என்றும் கூறி மிரட்டி இருக்கிறார்.
இவ்வாறு கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில் மாணவி இதுக்குறித்து தனது தாயிடம் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார், பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு இது பற்றி தெரிவித்துள்ளார். போலீசாரிடமும் சென்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் பியூனை கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில், அந்த மாணவியின் செல்போன் எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு வீடியோ கால் செய்து ஆடைகளை கழற்ற சொல்லி வற்புறுத்தியது தெரியவந்தது. இதை அடுத்து அவர் மீது, தகவல் தொழில்நுட்ப சட்டம் சட்ட பிரிவு 67 ஏ -ன் கீழ் வெளிப்படையான பாலியல் செயலை மின்னணு வழியில் வெளியிடுவது தடுப்பது போன்றவற்றிற்கு தண்டனையும் விதிக்கப்பட்டது. இதுக்குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.