எலுமிச்சை என்பது நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப் படும் ஒரு பழமாகும். பொதுவாக எலுமிச்சையை நம் பாட்டிமார்கள் திருஷ்டி எடுக்க பயன்படுத்துவார்கள், ஆனால் எலுமிச்சையின் வேலை இதனுடன் முடியவில்லை, இது நம்மை பல நோய்களில் இருந்தும் காப்பாற்ற உதவும்.
சர்க்கரை நோய் அதிகரிப்பதால் கவலையா? அதற்கான வீட்டு வைத்தியம்
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் குறிப்புகள்: நீரிழிவு நோய் மிகவும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். சர்க்கரை அதிகமாக இருந்தால், அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகும். சர்க்கரையை கட்டுப்படுத்த பல முறைகள் பின்பற்றப்படுகின்றன, அவற்றில் ஒன்று எலுமிச்சையாகும். எலுமிச்சை பழத்தில் இதுபோன்ற பல கூறுகள் உள்ளன, அவை நீரிழிவு நோயில் நன்மை பயக்கும். எனவே எலுமிச்சம்பழத்தைக் கொண்டு சர்க்கரை நோயை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
எலுமிச்சை பழத்தின் பண்புகள்
எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை, பல மடங்கு அதிகரிக்கிறது. வைட்டமின்-ஏ, வைட்டமின் சி, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் எலுமிச்சை பழத்தில் உள்ளன. அதேபோல் எலுமிச்சை பழத்தில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. எனவே எலுமிச்சை பழத்தின் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவாக உள்ளது, இதன் காரணமாக இது நீரிழிவு நோயில் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.
சர்க்கரை அளவை எவ்வாறு குறைப்பது?
பொதுவாக கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவு அதிகமாக இருகக்கும் பொருளை அதிகமாக சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு அதிகமாகும். எனவே, சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க வேண்டுமானால், குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள உணவைச் சாப்பிட வேண்டும். எனவே எலுமிச்சை பழத்தின் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்ளது, மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
எலுமிச்சை பழத்தை எப்படி உட்கொள்வது
* நாம் உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் ஒரு டம்ளர் எலுமிச்சை பழ தண்ணீர் குடித்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
* அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள உணவை சாப்பிட்டால், அதவாது எலுமிச்சை பழத்தை சாப்பிட்டால் சர்க்கரை நோய் ஏற்படாமல் இருக்க உதவும்.
* எலுமிச்சை பழத்தை சாலட்டில் பிழிந்து சாப்பிடலாம். எனவே உணவுடன் எலுமிச்சை பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.