மகாராணி எலிசபெத் இறக்கும் முன் நடந்த அதிசயம்!? – ஆச்சர்யத்தில் மக்கள்!
09 Sep,2022
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் இறக்கும் முன்னர் வானில் தோன்றிய அதிசயம் குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தின் மகாராணியாக கடந்த 70 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்தவர் இரண்டாம் எலிசபெத். 96 வயதான ராணி எலிசபெத் தற்போது உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். உலகிலேயே அதிக காலம் அரியணையில் வீற்றிருந்த மகாராணி என்று ராணி எலிசபெத் சாதனை படைத்துள்ளார்.
நேற்று மாலை 4.30 மணியளவில் மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழக்கும் சில நிமிடங்கள் முன்னதாக லண்டனில் பங்கிங்காம் அரண்மனை அருகே இரட்டை வானவில் தோன்றிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக ராஜ வம்சத்தை சேர்ந்தவர்கள் மறைந்தால் அதற்கு முன்னதாக இயற்கை அதற்கான சகுனங்களை காட்டும் என்பது பலரது நம்பிக்கை. சிலர் இந்த இரட்டை வானவில்லை அப்படியொரு சகுனமாக நம்புகிறார்கள். பலரும் இந்த இரட்டை வானவில்லின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.