உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் திடீரென உயிரிழப்பு!!
07 Sep,2022
பரிசைச் சேந்த 42 வயதுடைய ஒருவர் உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது திடீரென உயிரிழந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தின் Rue Carpeaux வீதியில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் குறித்த நபர், நேற்று நண்பகல் திடீரென உயிரிழந்துள்ளார். தனது துணையுடன் உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு வந்து அவர் உயிரிழந்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டபோது, குறித்த நபர் உடலுறவில் சிறப்பாக ஈடுபடுவதற்காக 3-MMC எனும் போதைப்பொருளை அளவுக்கதிகமாக உட்கொண்டிருந்தார் எனவும், இரத்தத்தில் 10 கிராம் அளவு போதைப்பொருள் கலந்திருந்ததாகவும், அதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதுபோன்ற போதைப்பொருள் பயன்படுத்துவது தற்போது அதிகரித்துள்ளதாக பிரான்சின் மருத்துகளுக்கான கட்டுப்பாட்டு அதிகார சபை அறிவித்துள்ளது. குறிப்பாக ஓரினச் சேர்க்கையாளர்கள் இதனை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் எனவும், இது எதிர்பார்ப்பதை விட மிக ஆபத்தானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது