ஒரே நாளில் கிட்டத்தட்ட 1,300 அகதிகள் பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு பயணம்!!
24 Aug,2022
கிட்டத்தட்ட 1,300 அகதிகள் ஒரே நாளில் பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு கடல்மார்க்கமாக சட்டவிரோத பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஓகஸ்ட் 22 ஆம் திகதி, நேற்று திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆங்கிலக்கால்வாய் ஊடாக நேற்று ஒரே நாளில் 1,295 பேர் பயணித்துள்ளனர். சிறிய ரக படகுகளில் மிக ஆபத்தான பயணம் மேற்கொண்டு அவர்கள் பிரித்தானியாவைச் சென்றடைந்துள்ளனர். 27 படகுகள் மொத்தமாக அகதிகளை ஏற்றிக்கொண்டு பயணித்துள்ளன.
இவ்வருடத்தில் இதுவரை 22,670 அகதிகள் பிரான்சில் இருந்து பிரித்தானியாவச் சென்றடைந்துள்ளனர். சென்ற ஆண்டில் இந்த திகதி வரையான காலப்பகுதியில் 12,500 அகதிகள் மட்டுமே பிரித்தானியாவுக்குச் சென்றடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இவ்வருடத்தில் நாள் ஒன்றில் அதிகபட்ச அகதிகள் மேற்கொண்ட பயணமாகவும் இது அமைந்துள்ளது.