பிரித்தானியாவில் வரலாறு காணாத வறட்சி - பலித்தது பாபாவின் தீர்க்கதரிசனம்!
16 Aug,2022
உலகம் சந்திக்கவுள்ள பல இன்னலகள் தொடர்பில் கண் பார்வை இல்லாத பாபா வங்கா என்ற தீர்க்கதரிசி முன்னரே கணித்திருந்தார்.
அதனடிப்படையில், பிரித்தானியாவில் கடுமையான வறட்சி ஏற்படும் எனவும் கணித்திருந்தார். இவ்வாறான நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரித்தானியாவில் அதிகாரப்பூர்வமாக வறட்சி பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி பெருநகரங்கள் வறட்சி மற்றும் தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்படும் என்றும் பாபா வங்கா கணித்திருந்தார்.
அதனடிப்படையில், இப்போது உலக நாடுகள் பல தண்ணீர்த் தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்னள. இவற்றையெல்லாம் பார்க்கும் போது பாபா வங்கா கூறியது உண்மையாகிவிட்டதோ என பலரும் எண்ணத்துவங்கியுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி, கண் பார்வை இல்லாத பாபா வங்கா, இரட்டைக் கோபுர தாக்குதல் உட்பட பல விடயங்களை முன் கூட்டியே துல்லியமாக கணித்தவர்.
தற்போது உலகம் சந்தித்து வரும் வறட்சி குறித்தும் கணித்துள்ளார். கண் தெரியாதவராக இருந்தும் பல விடயங்களை முன் கூட்டியே துல்லியமாக கணித்தவர் பாபா வங்கா.
1996இல் அவர் இறந்துபோனாலும், 5079ஆம் ஆண்டு வரையுள்ள விடயங்களை முன்பே கணித்துக் கூறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபா வங்கா பன்னிரண்டு வயதாக இருக்கும்போது பெரும் புயல் ஒன்றில் சிக்கி, பல நாட்களாக காணால் போயிருந்தார்.