பள்ளி பேருந்து ஓட்டுனரால் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
20 Jul,2022
பத்தாம் வகுப்பு மாணவியை பள்ளியின் பேருந்து ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் நடந்திருக்கிறது இந்த கொடூரம்.
அம்மாநிலத்தில் புனே பகுதியில் அமைந்திருக்கும் அந்த தனியார் பள்ளியில் 15வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். அதே பள்ளியில் 35 வயது உடைய வாலிபர் பள்ளி பேருந்து ஓட்டுனராக இருந்து வந்திருக்கிறார். இந்த பள்ளி பேருந்தில் அந்த 15 வயது பத்தாம் வகுப்பு மாணவி தினமும் சென்று வந்திருக்கிறார்.
தினமும் அந்த பேருந்தில் சென்று வந்ததால் ஓட்டுநரருடன் நல்ல அறிமுகம் இருந்திருக்கிறது. பள்ளி முடிந்ததும் அந்த மாணவி வழக்கமாக டியூசனுக்கு செல்வது வழக்கமாக சென்று வந்திருக்கிறார். சம்பவத்தன்று அந்த மாணவியை பார்ப்பதற்காக ஓட்டுநர் சென்று இருக்கிறார்.
அந்த பள்ளி பேருந்து ஓட்டுனர் டியூசன் ஆசிரியரிடம் சில காரணத்தைச் சொல்லி மாணவியை அழைத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் . மாணவியும் பழக்கமானவர் என்பதால் அவருடன் சென்றிருக்கிறார். அந்த ஓட்டுநர் ஒரு பாழடைந்த கட்டடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இங்கு எதற்காக அழைத்து போகிறீர்கள் என்று கேட்க, அதுவரைக்கும் அன்பாக பேசிக் கொண்டிருந்த ஓட்டுநர் அதன் பின்னர் மிரட்டி அந்த மாணவியை வலுக்கட்டமாக இழுத்துச் சென்று இருக்கிறார்.
அப்போதுதான் அந்த மாணவிக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை தெரியவந்திருக்கிறது. தப்பிக்க நினைத்த போது அவரை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். அதன் பின்னர் இங்கு நடந்தது யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி விட்டுச் சென்று இருக்கிறார். ஆனால் தப்பித்தால் போதும் என்று வீடு வந்து சேர்ந்த சிறுமி, பெற்றோரிடம் சொல்லி அழுது இருக்கிறார்.
பெற்றோர் போலீசில் புகாரளிக்க இந்த ஓட்டுனர் மீது போக்சோ உள்பட பல்வேறு வழக்குகளை சட்ட பிரிவுகள் மீது வழக்கு பதிவு செய்ய கைது செய்துள்ளனர்.
பள்ளியின் பேருந்து ஓட்டுநரே மாணவியை கடத்திச் சென்று பாலியல் உறவு செய்த சம்பவம் புனே பகுதியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது