மச்சினிச்சியை மடக்கிய அக்கா புருஷன்.. லாட்ஜில் ரூம் போட்டு செய்த பகீர் சம்பவம்..
04 Jul,2022
கட்டிலில் நிர்வாண நிலையில் சண்முகம் அழைத்து வந்த பெண்ணும், கட்டிலுக்கு கீழே அரை நிர்வாண நிலையில் சண்முகமும் இறந்த நிலையில் சடலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
லாட்ஜில் ரூம் போட்டு உல்லாசமாக இருந்து விட்டு கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு பேருந்து நிலையம் அருகே சத்தி ரோட்டில் தனியார் லாட்ஜ் உள்ளது. இந்த லாட்ஜில் நேற்று முன்தினம் காலை ஈரோடு நாராயணவலசு திருமால் நகரை சேர்ந்த சண்முகம் (52) என்பவர், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் வந்து ரூம் எடுத்து தங்கி உள்ளனர். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த லாட்ஜ் நிர்வாகத்தினர் அறை கதவை தட்டியுள்ளனர். இருப்பினும் கதவு திறக்கப்படாததால் அறையின் ஜன்னலின் வழியே எட்டி பார்த்துள்ளனர்.
அப்போது கட்டிலில் நிர்வாண நிலையில் சண்முகம் அழைத்து வந்த பெண்ணும், கட்டிலுக்கு கீழே அரை நிர்வாண நிலையில் சண்முகமும் இறந்த நிலையில் சடலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். இதனையடுத்து, இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இறந்து கிடந்தவர் சண்முகம் ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர் என்பதும், அவருடன் வந்த பெண் ஈரோடு மாநகராட்சி 2ம் மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றும் நாராயணவலசு பகுதியை சேர்ந்த காந்திமதி (40) என்பதும் தெரியவந்தது. காந்திமதி, சண்முகத்தின் மனைவி தமிழரசியின் தங்கையாவார். சண்முகத்திற்கு தமிழரசி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். காந்திமதிக்கு சரவணன் என்ற கணவரும், 2 மகள், ஒரு மகனும் உள்ளனர். சண்முகத்திற்கும், காந்திமதிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்ததால் பீரில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்த கொண்டுள்ளனர்.