12 வயதில் நோர்வே வந்து 42 வயதில் 22 நோர்வே நாட்டவரை சுட்ட இஸ்லாமிய தீவிரவாத
26 Jun,2022
நேற்றைய தினம் நோர்வே நாட்டின் தலை நகர் ஓசிலோவில் பெரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இதில் 2 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 21 பேர் படுயாகம் அடைந்து மருத்துவமனையில் உள்ளார்கள். 42 வயதாகும் சானியார் என்ற இஸ்லாமிய நபரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். இவர் ஒரு ஈரான் நாட்டவர் என்றும், 12 வயதில் அவர் நோர்வே வந்து அகதிகள் அந்தஸ்தை கோரி இருந்தார் என்றும் அறியப்படுகிறது. சுமார் 30 வருடங்கள் கழித்து, அவர் தீவிரவாதியாக மாறியுள்ளார். அல்லது அவர் ஒளிந்து கொண்டு இருந்துள்ளார் என்பதே உண்மையாகும்.
இன் நபர் ஓசிலோவில் உள்ள ஓரினச் சேர்கையாளர்கள்() கூடும் இடம் ஒன்றையே தாக்கியுள்ளார். இஸ்லாமிய மதத்தின் படி அது குற்றமாகும். அதாவது ஒரு ஆண் எத்தனை திருமணம் செய்து கொள்ள முடியும். ஆனால் ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் இணைந்து வாழ்வது இஸ்லாத்திற்கு ஏற்புடையது அல்ல. இவரைப் போன்ற இஸ்லாமியர்கள், தமது வாழ்கையை வழப்படுத்திக் கொள்ளவும். காசை சம்பாதிக்கவும், நல்ல வாழ்கையை வாழ மேற்குலகை நோக்கி அகதிகள் என்ற போர்வையில் வருகிறார்கள். ஆனால் பின்னர் மதத்தின் பேரால், மாற்றம் அடைந்து மேற்கு உலகில் உள்ள நாகரீகத்தை பிழை என்று கூறி, அவர்கள் உயிரைக் குடிக்கவும் தயாராகி விடுகிறார்கள். அதாவது உங்களுக்கு உங்கள் மதம் தான் முக்கியம் என்றால், நீங்கள் எங்கே பிறந்து வளர்ந்தீர்களோ அங்கேயே இருந்து கொள்வது நல்லது. வேறு ஒரு நாட்டுக்குச் சென்று அன் நாட்டில் உள்ளவர்களை மாற்ற முனைவது என்பது சற்றும் பொருத்தமில்லாத விடையம். அது அறிவு கெட்ட வேலை என்று தான் கூறவேண்டும்.