கட்டாரிடம் இருந்து மில்லியன் யூரோ தொகையை கைப்பற்றிய பிரித்தானிய இளவரசர்!
26 Jun,2022
பிரித்தானிய இளவரசர் சார்லஸ் கட்டாரின் முன்னாள் பிரதமரிடமிருந்து 3 மில்லியன் யூரோக்களுக்கு மேல் நன்கொடையாகப் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மனித உரிமை மீறல்களுக்காக கடும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் கட்டார் நாட்டிடம் இருந்து பிரித்தானிய இளவரசர் பெருந்தொகை நன்கொடையாக பெற்ற விவகாரம் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
கட்டாரின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹமத் பின் ஜாசிம் பின் ஜாபர் அல் தானி கடந்த 2011 மற்றும் 2015 க்கு இடையில் இளவரசர் சார்லசுடன் நடந்த சந்திப்பின்போது குறித்த தொகையை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
பிரித்தானிய அடிமை வர்த்தகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய நினைவு தினத்தை அறிவிப்பதன் மூலம் இங்கிலாந்தின் மனித உரிமைகள் பதிவுக்கு திருத்தம் செய்ய முடிவு செய்துள்ள நிலையிலேயே இளவரசர் சார்லஸ் தொடர்பில் 3 மில்லியன் யூரோ கைப்பற்றிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதில் முரண்பாடாக, கட்டார் அதன் சொந்த மனித உரிமை மீறல்கள் குறித்து நீண்ட காலமாக கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. கட்டார் பிரதமருடன் கிளாரன்ஸ் மாளிகையில் நடந்த சந்திப்பின் போது ஒரு சூட்கேஸில் 1 மில்லியன் யூரோ தொகை இளவரசர் சார்லஸ் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
மேலும், அங்காடிகளில் வழங்கப்படும் பைகளிலும் பலமுறை பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் இல்லாத 500 யூரோ தாள்களையே அப்போது இளவரசர் சார்லசிடம் கட்டார் பிரதமர் அளித்துள்ளதாக பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனால் இளவரசர் சார்லஸ் குறித்த பணத்தை தமது பெயரில் செயல்படும் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, கட்டார் பிரதமருடன் இளவரசர் சார்லஸ் சந்தித்துக்கொண்டதற்கான எந்த ஆவணங்களும் பதிவகவில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும், சவுதி கோடீஸ்வரர் ஒருவருக்கு உதவும் பொருட்டு, இளவரசர் சார்லஸ் நன்கொடை பெற்ற விவகாரமும் முன்னர் வெளிச்சத்துக்கு வந்தது. கட்டாருடன் இளவரசர் சார்லசின் இந்த ரகசிய உறவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கால்பந்து உலக கிண்ணத்தை முன்னெடுக்கும் கட்டாரில் கட்டுமான பணிகளில் ஈடுபட்ட 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளதை கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
அடிமைத்தனத்திற்கு தள்ளப்பட்ட மில்லியன் கணக்கானவர்களை நினைவுகூரும் தேசிய தினத்திற்கான இளவரசர் சார்லஸின் அழைப்பு வெளியான நிலையில், கட்டார் பிரதமருடனான இந்த பண பரிமாற்றம் தொடர்பில் ரகசியங்கள் அம்பலமாகியுள்ளது.