#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
நேரத்திற்கு தகுந்தாற் போல நீங்கள் வளைந்து கொடுத்து செயல்பட வேண்டும். உங்கள் தனித்திறனுக்கு இன்று சவால் நிறைந்த நாள் ஆகும். இருந்தாலும் கடவுளின் ஆசீர்வாதத்தோடு நீங்கள் பெரும் வெற்றிகளை பெற முடியும். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். சட்டப்பூர்வமான அல்லது அலுவல் சார்ந்த உங்கள் சிக்கல்களுக்கு தீர்வு அளிக்கும் தொடர்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - டீல்
அதிர்ஷ்டமான நாள் - ஞாயிற்றுக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - ஆசிரமங்களில் மஞ்சள் நிற பருப்பு தானம் செய்யவும்.
#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வருவதாக பழைய நண்பர் அல்லது புதிய நண்பர் வாக்குறுதி அளிப்பார். உங்கள் காதல் உறவில் நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் காதல் கனவுகள் நனவாகுவதற்கான நாள் இதுவாகும். வணிகத்தில் பெரும் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து செயல்படுவதற்கான தருணம் இது. முக்கிய முடிவுகளை எடுக்கும்போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும்.
அதிர்ஷ்ட நிறம் - வான் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 2 மற்றும் 6
தானம் - ஏழைகளுக்கு அரிசி தானமாக கொடுக்கவும்.
#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்றைக்கு உங்களுக்கான அதிர்ஷ்டம் சாதகமானதாக இருக்கும். ஆனால் நண்பர்களுடன் இருக்கும்போது நிதி சார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இசையமைப்பாளர்கள், டிசைனர்கள், மாணவர்கள், செய்தி வாசிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்டோருக்கு துறை சார்ந்த வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - வியாழக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 3 மற்றும் 1
தானம் - தேவை உள்ளவர்களுக்கு எலுமிச்சை சாதம் வழங்கவும்.
#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்கள் அதிர்ஷ்டத்தை நோக்கி அனைத்து விஷயங்களும் நடக்க இருக்கின்றன. அனைத்து நிகழ்வுகளையும் சரியான சமயத்தில் உங்களால் முடிக்க இயலும். கட்டுமானம், இயந்திரம், மெட்டல், சாஃப்ட்வேர் போன்ற துறைகளில் வணிகம் செய்பவர்கள் இன்றைக்கு எந்தவித ஆவணத்திலும் கையெழுத்திடக் கூடாது. பெற்றோர் உங்களை நினைத்து பெருமை அடைவார்கள்.
அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9
தானம் - ஆதரவற்ற நபர்களுக்கு உடைகளை தானமாக வழங்கவும்.
#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று வீட்டில் இருந்து பணி செய்யவும், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பொழுது கழிக்கவும் நல்ல வாய்ப்பு ஆகும். புதிய முதலீடுகளை எளிமையாக செய்ய இயலும். உங்கள் திறமைக்கு ஏற்ப பொதுமக்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். சொத்து அல்லது பங்குச்சந்தை சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்தால் வெகு விரைவில் லாபம் கிடைக்கும். இன்று உங்கள் காதலை வெளிப்படுத்தலாம்.
அதிர்ஷ்ட நிறம் - கடல் பச்சை
அதிர்ஷ்டமான நாள் - புதன்கிழமை
அதிர்ஷ்ட எண் - 5
தானம் - ஏழைகளுக்கு ஆப்பிள் தானம் செய்யவும்.
#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்கள் வேலைக்கு வெளியே புதிய வாய்ப்புகளை தேடிக் கொள்வதற்கான நாள் ஆகும். இன்று நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். நண்பர்களை சந்திக்க அல்லது குடும்பத்தினருடன் வெளியே செல்வதற்கு நல்ல நேரம் ஆகும். இன்றைக்கு புன்னகையுடன் இருங்கள். அவ்வபோது கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். எதிர்காலம் குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர் வழிகாட்ட வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம் - நீலம்
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - வெள்ளி நாணயங்களை தானமாக கொடுக்கவும்.
#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
ரோலர் கோஸ்டர் பயணம் போல உங்கள் வாழ்க்கையில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்திருப்பீர்கள். உங்கள் உடன் இருக்கும் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவோடு வெற்றி பெறுவீர்கள். உறவுகளில் மதிப்பும், நம்பிக்கையும் அதிகரிக்கும். நீண்ட காலமாக நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் அமைதியாக இருக்கும் காரணத்தால் வணிகம் சார்ந்த விஷயங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு மற்றும் நீலம்
அதிர்ஷ்டமான நாள் - திங்கள்கிழமை
அதிர்ஷ்ட எண் - 7
தானம் - கோவில்களில் மஞ்சள் நிற இனிப்புகளை வழங்கவும்.
#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உங்களுக்கான அதிர்ஷ்டம் மற்றும் நிலையான உழைப்பு ஆகியவை நிதி சார்ந்த விஷயங்களில் நீண்ட கால லாபங்களை ஈட்டித் தர இருக்கிறது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் அறிவுரையை கேட்கவும். வெற்றி வெகு தூரத்தில் இல்லை. ஆகவே நிறைய பொறுப்புகளை உங்கள் தோளில் சுமக்க தயார் ஆகலாம். இன்றைக்கு நீங்கள் கட்டாயமாக பயணங்களை தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம் - கடல் நீலம் மற்றும் சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண் - 6
தானம் - ஏழைகளுக்கு பிரவுன் அரிசி தானம் செய்யவும்.
#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
மருத்துவ அறிவியல், நிதித்துறை, ஜோதிடம், வாஸ்து போன்ற துறைகளில் இருப்பவர்கள் மற்றும் மாணவர்களுக்கான புகழ் அதிகரிக்க உள்ளது. இன்றைய நாள் முழுவதும் சாதனைகளால் நிறைந்திருக்கும். வணிகம் அல்லது வேலைவாய்ப்பில் வெற்றியை ஈட்டுவதற்கு நண்பர்களின் உதவியை நாட சரியான நாள் ஆகும். இன்றைக்கு சிவப்பு நிற உடை அணிய வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
அதிர்ஷ்டமான நாள் - செவ்வாய்க்கிழமை
அதிர்ஷ்ட எண் - 9 மற்றும் 6
தானம் - ஏழைகளுக்கு சிவப்பு நிற பழங்களை தானமாக கொடுக்கவும்.