தெலுங்கானாவை உறைய வைத்த ‘பென்ஸ் கார்’ பலாத்காரம்! அடுத்ததாக சிக்கிய டிஆர்எஸ் புள்ளியின் வாரிசு
05 Jun,2022
ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலத்தையே உறைய வைத்த சம்பவமான மெர்சிடிஸ் பென்ஸ் காருக்குள் வைத்து பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மகன் உள்ளிட்ட 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மே 28 அன்று ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பார்ட்டி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 17 வயது சிறுமி, ஐந்து இளைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் தெலுங்கனாவில் ஆளும் முதல்வர் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பிரமுகர்களின் வாரிசுகள் சிக்கியிருப்பதாகவும், அவர்களை தப்பிக்க வைக்க காவல்துறையினர் முயல்வதாக பகீர் புகார் கிளம்பியது.
தெலுங்கானாவில் அதிர்ச்சி
தெலுங்கானா மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் தற்போது அரசியல் ரீதியாகவும் பெரும் பிரச்சினையாக வெடித்துள்ளது. எதிர்க்கட்சியான பாஜக, ஆளும் டிஆர்எஸ் கட்சி மற்றும் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர்களின் தலையீடு காரணமாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கைது செய்வதில் தாமதப்படுத்துவதாகக் கூறியது. மேலும் போலீசார் மற்றும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய பாஜகவினர், விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி நகரில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் தர்ணா போராட்டத்தையும் நடத்தினர்.
அடுத்தடுத்து கைது
விவகாரம் பெரிதான நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சதுதீன் மாலிக் என்ற ஒரு குற்றவாளி நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மைனர் சிறுவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் ஒரு சிறுவன் தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் உள்ளூர் தலைவரின் மகன் என்றும் தகவல் வெளியானது.
பாலியல் பலாத்காரம்
மே 28 அன்று ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பார்ட்டி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 17 வயது சிறுமி, ஐந்து இளைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த சம்பவத்தின் பொது பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 5 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பபம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளில் ஒருவர் மாநில உள்துறை அமைச்சரின் பேரன் என கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நடவடிக்கை எடுக்க உத்தரவு
ஆளும் டிஆர்எஸ் செயல் தலைவரும் தெலுங்கானா அமைச்சருமான கே.டி.ராமராவ், இந்த வழக்கில் "உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கையை எடுக்குமாறு மாநில உள்துறை அமைச்சர், காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) மற்றும் ஹைதராபாத் நகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ள நிலையில், அதிகாரிகள் அடுத்தடுத்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்