பாலியல் தொல்லை – குவைத்துக்கு வேலைக்கு சென்ற இளம்பெண் கதறல்
01 Jun,2022
வேலை வாங்கி தருகிறேன் என்று சொல்லி இளம்பெண்ணை குவைத் நாட்டிற்கு அழைத்துச் சென்று அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்கள் ஏஜென்ட்கள். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம் பெண், எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கதறி கணவருக்கு வீடியோ அனுப்பி இருக்கிறார்.
ஆந்திர மாநிலத்தில் திருப்பதி மாவட்டம் எர்ரா வாரி பாளையம் வட்டி பள்ளி. இப்பகுதியைச் சேர்ந்த இளம் பெண் திருமணமாகி கணவருடன் வசித்து வந்திருக்கிறார். குடும்ப சூழ்நிலையால் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்க்கலாம் என்று முடிவெடுத்த போது ஏஜென்ட் குவைத்தில் வேலை இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். அதை அடுத்து ஏஜென்ட் மூலம் குவைத் வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.
அந்த இளம் பெண் அங்கே சென்றதும் ஏஜென்ட்கள் செங்கல் ராஜா, மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பாபாஜி ஆகியோர் அவர்களின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி இருக்கிறார்கள் . அதற்கு அந்த இளம் பெண் அனுமதிக்காததால் அறையில் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் சித்திரவதை செய்து வந்திருக்கிறார்கள். தொடர்ந்து அந்த பெண்ணிடம் பாலியல் செயல்களிலும் ஈடுபட்டு வருந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் அந்த பெண் தன் கணவருக்கு செல்போன் மூலமாக பேசி அதில் செல்பி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த மாதிரியான சூழலில் சிக்கிக் கொண்டு தவிக்கிறேன் என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கண்ணீர் விட்டு கதறி இருக்கிறார். மனைவியின் இந்த செல்பி வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவரும் மாமியாரும் உடனடியாக மீட்டுத் தாருங்கள் என்று எப்படியாவது மீட்டுத் தாருங்கள் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள் . இந்த வீடியோ வைரலாகி பலரும் அந்த பெண்ணை மீட்டு தர வேண்டும் என்று காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.