உயர் இரத்த அழுத்தத்தை மின்னல் வேகத்தில் குறைக்கும் பானம்!
18 May,2022
நாம் இன்று ஒரு அற்புதமான பானம் குறித்து பார்க்க போகின்றோம். ஆரோக்கியமற்ற பல வாழ்க்கை முறைகள் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் போன்ற நோய்களைத் தூண்டும். இந்த ஒரு பானத்தை தினமும் உட்கொள்வது கெட்ட கொழுப்பைக் குறைத்து உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் என ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எலுமிச்சை, இஞ்சி மற்றும் பூண்டு கலந்த பானம் எலுமிச்சை, இஞ்சி மற்றும் பூண்டு கலந்த ஆரோக்கிய பானம் உங்கள் உடலுக்கு பல்வேறு அதிசயங்களை செய்கின்றன.
இஞ்சி, பூண்டு மற்றும் எலுமிச்சை ஆகியவை இயற்கையான கூறுகளால் நிரம்பியுள்ளன.
அவை உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. தமனிகளில் அடைப்பைத் திறக்க உதவுகின்றன.
இந்த பானம் எல்டிஎல் அளவைக் குறைக்கின்றன. அது மட்டும் இன்றி இது எடை இழப்புக்கு உதவுகிறது.
பானம் தயாரிப்பது எப்படி?
5 கப் தண்ணீர்
3 இன்ச் இஞ்சி வேர்
4 பூண்டு பற்கள்
சிறிதளவு எலுமிச்சை சாறு
தேவையான அளவு தேன்
செய்முறை
இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
அடுத்து, தீயை அணைத்து சிறிதளவு அளவிலான எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
இந்த பானத்தை சேமித்து தேன் கலந்து சூடாக அருந்தலாம்.
முக்கிய குறிப்பு
இறுதி குறிப்பு இந்த பானத்தை மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு முன் உட்கொள்ளலாம்.
ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் சீரான வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் இணைந்தால் மட்டுமே இந்த பானம் உங்களுக்கு நன்றாக வேலை செய்யும்.