கண் அடிப்பதன் நோக்கம் என்ன? (ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்த்து)
23 May,2011
வாய் பேசும் ஆயிரமாயிம் மொழிகளை விட கண்கள் பேசும் பேச்சுகள் கணக்கிலடங்கா. காதலைச் சொல்ல கண்ணடிப்பது ஒரு வழக்கம். வலது பக்கக் கண்ணடித்தால் சந்தோஷப்படுங்கள். இதற்கு ஐலவ்யூ என்று அர்த்தம்.
அதே இடது பக்கக் கண் என்றால் மனதைக் கொஞ்சம் தேற்றிக் கொள். உன்னை எனக்குப் பிடிக் கவில்லை என்று அர்த்தமாம்.
இரண்டு கண்களையும் திறந்து மூடினால் நீங்கள் சொல்வதற்கு

சரின்னு அர்த்தம். ஆனால் அதே மாதிரி இரண்டு மூன்று தடவைகள் செய்தால் நம்மை யாரோ பார்க்கிறார்கள் என்று அர்த்தம்.
வலது கண்ணை இரண்டு தடவை அடித்தால் எனக்கு ஏற்கனவே இன்னொருவருடன் காதல் உண்டு என்று அர்த்தமாம். இதையெல்லாம் வாசித்து எக்குத்தப்பா கண்ணடித்து மாட்டிக் கொண்டீர்களானல் அதற்கு நான் பொறுப்பல்ல..