டைனோசர்களை அழித்த விண்கல்.. பூமியில் எங்கு மோதியது தெரியுமா? கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!
08 May,2022
பூமியில் 66 மில்லியன் வருடங்களுக்கு முன் விண்கல் மோதியதில் டைனோசர்களின் இனமே அழிந்தது. அந்த விண்கல் பூமி மீது விழுந்த அடுத்த நொடி மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. பல இடங்களில் பெரும் சுனாமிகள் ஏற்பட்டன.
மலைகள் நொடியில் விழுந்து நொறுங்கின. இதுவே மனித இனம் பின்பு தோன்றுவதற்கும் காரணமாக இருந்தது.
ஆராய்ச்சி
ஆராய்ச்சி
இந்த விண்கல் விழுந்த பகுதிகளில் இப்போதும் கூட ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. விண்கல் விழுந்த போது தப்பித்து, அதன்பின் சில நாட்களில் வானிலை மாற்றம், வெப்பம் காரணமாக பலியான டைனோசர்கள் குறித்த ஆராய்ச்சிகளும் கூட இப்போதும் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை பல டைனோசர்களின் எலும்புகள், மண்டை ஓடுகள் அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் மீட்கப்பட்டு இருக்கின்றன. இந்த இனம் அழிந்தது எப்படி என்ற தீவிர ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
எங்கே?
எங்கே?
இந்த நிலையில்தான் டைனோசர்களின் மறைவிற்கு காரணமாக இருந்த விண்கல் மெக்சிகோவில் சரியாக எந்த இடத்தில் விழுந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல்லின் சுற்றளவு 80 கிலோ மீட்டர் வரை இருந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரான்ஸ் 5 ஊடகத்தில் வந்த ரிப்போர்ட்டில்.. பூமியை தாக்கியதிலேயே மிகப்பெரிய விண்கல் இதுதான். ஆனாலும் இது சரியாக எங்கு விழுந்தது என்ற குழப்பம் இருந்தது. மெக்சிக்கோவில் எங்கு விழுந்தது என்ற குழப்பம் நிலவியது.
பிரான்ஸ் 5 ஊடகம்
பிரான்ஸ் 5 ஊடகம்
இது தொடர்பாக பிரான்ஸ் 5 ஊடகத்தில் வந்த ரிப்போர்ட்டில், அந்த விண்கல் சரியாக மெக்சிகோவில் Chicxulub என்ற இடத்தில் இந்த விண்கல் விழுந்துள்ளது. சரியாக Yucatநூn தீபகற்பதிற்கு அருகில் இந்த கல் விழுந்துள்ளது. இந்த விண்கல் விழுந்த இடத்தில் இருந்து 140 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பெரிய அலைகளும், நிலநடுக்கமும், வெள்ளமும் ஏற்பட்டதாக அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதோடு பூமியில் இருந்து சிதறிய சில பாறைகள் அப்போது வானத்திற்கு சென்று, விண்வெளியில் சிதறியதாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிமலைகள்
எரிமலைகள்
இதனால் அணு ஆயுதங்கள் பல ஒரே நேரத்தில் வெடித்தது போன வானிலை பூமியில் நிலவியதாகவும் பிரான்ஸ் 5 ஊடகத்தில் வந்த ரிப்போர்ட்டில்.. குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை தொடர்ந்து அடுத்தடுத்த நிமிடங்களில் பூமியில் பல இடங்களில் எரிமலைகள் வெடித்தன. விண்கல் விழுந்ததன் ரியாக்சன் போல உலகம் முழுக்க பல இடங்களில் எரிமலைகள் வெடித்தன. இதுவும் கூட பல்வேறு உயிரினங்கள் மொத்தமாக அழிந்து போக காரணமாக இருந்ததாக பிரான்ஸ் 5 ஊடகத்தில் வந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.