ரஷ்யா: மெதுவாக முழு உக்கிரைனையும் கைப்பற்றக் கூடும் என்று EU எச்சரிக்கை !
22 Apr,2022
உக்கிரைன் நாட்டின் மிக முக்கிய இடமான, மரியப் போல் நகர் ரஷ்யா தற்போது தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. மேலும் கடந்த சில வாரங்களாக அவர்கள் வான் தாக்குதலை அதிகரிக்காமல், ராணுவத்தை நகர்த்தி இடங்களை கைப்பற்றி வருகிறார்கள். மெதுவாக நகரும் ஒரு தந்திரத்தை ரஷ்யா தற்போது கையாண்டு வருகிறது. இதனூடாக முழு உக்கிரைனையும் அவர்கள் கைப்பற்றக் கூடும் என்று ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு அதிகாரிகள், எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இன் நிலையில் பிரித்தானியா உக்கிரைன் ராணுவத்திற்கு பயிற்ச்சி கொடுப்பது என்ற முடிவை எட்டியுள்ளது.
அமெரிக்கா மீது அணு குண்டை ஏவினால் எப்படி இருக்கும் என்று பேசி சிரித்த ரஷ்ய தொகுப்பாளர்
ரஷ்யாவின் TV நிலையம் ஒன்றில் நேற்று(21) நடந்த நிகழ்ச்சியை பார்த்த பலர் அதிர்ந்து போய் உள்ளார்கள். காரணம் நிகழ்ச்சி தொகுப்பாளர், அமெரிக்காவின் நியூ-யோர்க் நகர் மீது ரஷ்யா தனது அணு குண்டு ஏவுகணையை ஏவினால் எப்படி இருக்கும் ? அழிவு எந்த அளவு இருக்கும் என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் பேசி, கெக்கட்டமிட்டு சிரித்துள்ளார். இதனை ரஷ்ய மக்களே ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் ஒரு நாட்டின் மீது அணு குண்டை ஏவினால், எத்தனை லட்சம் பேர் உயிர் இழப்பார்கள் என்பது தெரியும். இதனை ஒரு கேலியாக ஒரு கருது பொருளாகப் பேசிய விடையத்தை ரஷ்ய மக்களே கடுமையாக கண்டித்து வருகிறார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியை புட்டின் படை ஆதரவாளர்கள் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.