8 மாதங்களாக 80 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 13 வயது சிறுமி!
                  
                     20 Apr,2022
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	 
	ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 8 மாதங்களுக்கு மேலாக 80-க்கும் மேற்பட்ட ஆண்கள் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ள அதிர்ச்சியான சம்பவம் தெரியவந்துள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூரில் கடந்த செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் விடுதி ஒன்றில் இருந்து 13 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
	 
	    
	இந்த சிறுமியிடம் விசாரணை செய்ததில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக இந்த விபச்சார விடுதிக்குள் சிறுமி தள்ளப்பட்டிருப்பதும், அவரை 80க்கும் மேற்பட்ட ஆண்கள் பலாத்காரம் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக போலீசார் தெரிவித்துள்ள தகவலின்படி, குற்றத்தில் ஈடுபட்ட 80 பேரையும் போலீசார் கைது செய்துள்ளதாகவும், மேலும் தப்பியோடியுள்ள சிலரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
	 
	மேலும், கொரோனா தொற்றுஏற்பட்ட போது மருத்துவமனையில் தனது தாய்க்கு பழக்கமாகிய பெண் தான் சவர்ண குமாரி எனவும், தனது தாய் கொரோனா தொற்றால் இறந்த பின்பு எனது தந்தைக்கு தெரியாமல் அழைத்து சென்று விடுதியில் விட்டு விட்டார் எனவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
	 
	மேலும் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமி இருக்கும் விடுதியை கண்டறிந்து மீட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு முக்கிய குற்றவாளியான சவர்ண குமாரி என்ற பெண்ணையும் போலீசார் தற்பொழுது அடையாளம் கண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.