சர்வதேச அரங்கில் மீண்டும் போர்க் குற்றம் பற்றிய குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன அதில் முதல் குற்றச்சாட்டு சுவாரஷ்யமாக அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து வந்திருக்கிறது.
உக்ரேனில் போரைக் கட்டவிழ்த்து விட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை ‘போர்க் குற்றவாளி’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வர்ணித்துள்ளார்.
சமகால உலகில் போர்க்குற்றவாளி என்பது பாரதூரமான வார்த்தை. அதைப் போலத்தான் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம், இனச்சுத்திகரிப்பு என்கின்ற வார்த்தைகளும் காணப்படுகின்றன.
உக்ரேனிய மண் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் ‘சகலதும்’ நிகழ்வதாக மேற்குலகம் குற்றஞ்சாட்டுகிறது இதற்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் பொறுப்புக்கூற வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது.
இந்தக் குற்றங்களை எவ்வாறு வரையறை செய்தல் என்பது தான் தற்போதுள்ள பிரச்சினையாகின்றது, ஏறத்தாழ எல்லா வகையான நெருக்கடிகளையும் வரையறை செய்யக்கூடியதாக ஐக்கிய நாடுகள் சாசனம் உள்ளது.
இந்தச் சாசனத்தின்படி பார்த்தால், உக்ரேனை ஆக்கிரமிப்பதன் மூலம் ரஷ்யா குற்றம் செய்திருக்கிறது.
அது ஆக்கிரமிப்புக் குற்றமாகும் அதனடிப்படையில், சர்வதேச நீதிமன்றம் விரைந்து செயற்பட்டு, உக்ரேனிய மண்ணில் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் மூலம் சர்வதேச நீதிமன்றத்தின் நிலைப்பாடு தெளிவாகிறது.
புட்டின் போரை நாடியதன் மூலம் உலக சட்ட ஒழுங்கின் அடிப்படைகள் மீறப்பட்டிருக்கின்றன என்பது பரலான குற்றச்சாட்டென்றால், அந்தக் குற்றச்சாட்டு நியாயமானதே.
சர்வதேச சட்டத்தின் கீழ் எது குற்றமாக வரையறை செய்யப்படுகிறதோ, அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்புக் குற்றம் தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடிய சாத்தியம் உண்டு.
சர்வதேச நீதிமன்றத்தின் வழக்குத்தொடுனர் புட்டினுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்க எது தேவையோ அதற்குரிய ஆதாரங்கள் உள்ளதாக மேலைத்தேய நாடுகள் சொல்கின்றன.
இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இத்தகைய பிடிவிறாந்தைப் பிறப்பிக்க. எந்தவொரு சர்வதேச நீதிமன்றமும் கிடையாது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வேறுபட்டது. இந்த நீதிமன்றம். உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பில் நடப்ப
வற்றை விசாரித்து வருவது உண்மைதான்.
எனினும், சர்வதேச நீதிமன்றின் விசாரணை வேறுபட்டது. இந்த நீதிமன்றத்தின் மூலம், ரஷ்யா ஏன் யுத்தத்தைத் தொடங்கியதென விசாரிக்க முடியாது.
யுத்தத்தின்போது கட்டவிழ்த்து விடப்பட்ட குற்றங்களை விசாரிக்கலாம்.
சர்வதேச நீதிமன்றின் நியாயாதிக்க எல்.*லைகளை வரையறுக்கும் ஆவணமானரோமன் சட்டத்தின்படி, இந்த நீதிமன்றம். எதை விசாரிக்க முடியும் என்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போர்க்குற்றங்கள் பற்றி விசாரிக்கலாம். இனச்சுத்திகரிப்பு, மனிதாபிமானத்திற்கு எதிரான குற்.றங்கள் பற்றியும் விசாரிக்க முடியும்.
எனினும், இங்கொரு அரசியல் உள்:ளது. ஆக்கிரமிப்பை சர்வதேச அளவிலான குற்றமாகக் கருத வேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள் சோவியத் ஒன்றியத்தின் சட்டத்தரணிகள் தான்.
இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஜேர்மனியின் நாஸித் தலைவர்களும், அமெரிக்காவும் ஆக்கிரமிப்பை செய்து சர்வதேச அமைதிக்கு எதிராக குற்றம் புரிந்தார்கள் என்று சோவியத் ஒன்றியத்தின் சட்டத்தரணிகள் வாதிட்டார்கள்.
இதன்போது, உக்ரேனில் ஜேர்மன் படைகள் நடத்திய அட்டூழியங்களும் நியூரம்பர்க் வழக்கு
விசாரணைகளில் பேசப்பட்டன. இந்த ஆக்கிரமிப்புக் குற்றம் என்பது விவகாரமானது. ‘மாமி உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்’ என்பது போன்றது தான்.
அமெரிக்கா போன்ற நாடுகள் ஆக்கிரமித்தால், அது சர்வதேச குற்றமாக இருக்கக்கூடாது
என்பதற்காக, ஆக்கிரமிப்புக் குற்றத்தை விசாரிக்கும் ஆணை எந்தவொரு சர்வதேச நீதிமன்றத்திற்கும் கிடைக்காதிருக்கும் வகையில் சூசகமான இராஜதந்திரம் முன்னெடுக்கப்பட்டது.
2018இல் சர்வதேச நீதிமன்றின் ரோமன் சட்டத்தில் திருத்தங்களை செய்து, ஆக்கிரமிப்புக் குற்றத்தை அதில் சேர்த்தபோதும், ஒவ்வொரு நாடுகளும் தடைக்கற்களைப் போட்டன.
இந்தத் தடைக்கற்கள் காரணமாக, ரஷ்யா உக்ரேனில் மேற்கொண்ட ஆக்கிரமிப்பை
சர்வதேச நீதிமன்றின் மூலம் விசாரிக்க முடியாததொரு சூழ்நிலை உள்ளது.
இதற்கொரு சிறந்த உதாரணம் அமெரிக்கா.
இந்நாட்டின் ஜனாதிபதியே புட்டினை ‘போர்க் குற்றவாளி’ என்று குற்றம்.
சுமத்துகிறார்.
இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு எதுவித அருகதையும் கிடையா தெனக் கூறுவதற்கு இரண்டு காரணங்களை முன்வைக்கலாம்.
முதலாவது காரணம், சமீபகால வரலாற்றில் ஈராக், ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பு அடங்கலாக உலகின் மிக மோசமான ஆக்கிரமிப்புக் குற்றங்களைக் கட்டவிழ்த்து
விட்ட நாடு அமெரிக்கா தான்.
இரண்டாவது காரணமும் முக்கியமானது. அமெரிக்காவிற்கு சர்வதேச நீதிமன்றில் அங்கத்துவம் கிடையாது.
இருந்தபோதிலும், ஆக்கிரமிப்பு என்பதை குற்றமாகக் கருதி விசாரிக்கக்கூடிய நியாயாதிக்கம் சர்வதேச நீதிமன்றிற்கு கிடைக்காமல் தடுத்து நிறுத்தியதில் முன்னின்று பாடுபட்டது அமெரிக்கா தான்.
மீண்டும் உக்ரேனுக்கு வருவோம்.
புட்டின் உக்ரேனை ஆக்கிரமித்ததால் தான் இன்று வைத்தியசாலைகளும், பாடசாலைகளும், வணக்கஸ்தலங்களும் கூட ‘இலக்கு வைக்கப்படுகின்றன. உயிர் தப்பு வதற்காக மக்கள் கூட்டமாக தஞ்மடைந்த அரங்கமொன்றின் மீதும் குண்டுத் தாக்:குதல் மேற்கொள்ளப்படுகிறது.
ஆக்கிரமிப்பு குற்றம் என்றால், அந்தக்குற்றத்தின் அடிப்படையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேறு வழியிருக்கிறதா என்பதை ஆராய்வது முக்கியமானது.
இதற்காக, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுண் போன்றவர்கள், நியூரம்பர்க் தீர்ப்பாயம் போன் றதொரு வடிவமைப்பில் உக்ரேனுக்கு
எதிரான ஆக்கிரமிப்புக் குற்றத்திற்கு தண்டனை அளிப்பதற்கான விசேட தீர்ப்
பாயத்தை அமைக்குமாறு யோசனை கூறியுள்ளார்கள்.
இந்தத் தீர்ப்பாயத்தின் மாதிரிகளையும் அமைத்துள்ளார்கள்.
இது தவிர, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையும், உக்ரேனும் நிர்வகிக்கக்கூடிய கலப்பு தீர்ப்பாயமொன்றை அமைக்க வேண்டும் என்ற யோசனையும் கூறப்படுகிறது.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கவலைக்குரிய விஷயம்
யாதெனில், உக்ரேனிய மண்ணில் மனி’தப்பேரவலம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த மனிதப் பேரவலம் நிகழ்வதற்கு வழிவகுத்த ஆக்கிரமிப்பின் மூல வேர்களை ஆராய்ந்து உக்ரேனுக்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான நூற்றாண்டு காலபிரச்சினையைத் தீர்ப்பதில் உலக நாடுகளுக்கு அக்கறை கொண்டிருக்கவில்லை..
பொறுப்புக்கூறலை பின்னர் பார்த்துக்கொள்ளாலம் இப்போதைக்கு யுத்தத்தை நிறுத்தவேண்டிய வழிவகைகள் எவையென்பதை ஆராயப்படவுமில்லை.
பொறுப்புகூறல் என்றுவந்துவிட்டால் 2003இல் அமெரிக்கா இராக்கை ஆக்கிரமித்தபோது கட்டவுழ்த்துவிட்ட கொடுமைகளுக்கு எந்தத் அமெரிக்கத் தலைவர்கள் எந்தத் தீர்ப்பாயத்தில் பொறுப்புக்கூறினார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
சிரியா, யேமன் போன்ற நாடுகளிலும் இன்னமும் யுத்தம் நடந்து கொண்டு தானிருக்கிறது. இந்த யுத்தங்களில் பல்வேறு உலக நாடுகளும் சம்பந்தப்பட்டுத்தான்
இருக்கின்றன.
இங்கு பொறுப்புக்கூறல் எந்தமூலையில் இருக்கிறது? உக்ரேனிய மண்ணின் மீதான ஆக்கிரமிப்பிற்கும், அதன் விளைவுகளுக்கும் புட்டின் பொறுப்புக்கூற வேண்டியவர் என்பதில்
எதுவித மாற்றுக் கருத்துக்கள் இல்லைதான்.
எனினும், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அதன் பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு நேட்டோவைக் கிழக்கு நோக்கி விஸ்தரித்து, தற்போதைய ரஷ்யாவை வீழ்த்த நினைத்த அமெரிக்காவின் இராணுவ
வல்லாதிக்க மனோபாவத்திற்கு _யார் பொறுப்புக் கூறுவது?
ஒரு போரின் முடிவில் அமைதி திரும்பவேண்டும் என்பதும், அது நீடித்து நிலை
த்திருப்பதற்குரிய வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் மனித குல
நாகரிகத்தின் அடிப்படை விழுமியங்கள்.
அந்த விழுமியங்களை அப்பட்டமாக மீறி, இரண்டாம் உலக மகாயுத்தத்தின்
முடிவில் இராணுவ நலன்களை முன்னிறுத்திய நேட்டோ என்ற அமைப்பை
உருவாக்கியதே தார்மீகத்திற்கு முரணானதெனில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பற்றி
உரத்துக் குரல் கொடுக்கக்கூடிய உரிமை மேற்குலகிற்குக் கிடையாது.
-சதீஷ் கிருஸ்ணபிள்ளை-