புட்டினுக்கு நஞ்சு வைக்க திட்டமிட்ட ரஷ்ய கொள்கை வகுப்பாளர்கள்-
21 Mar,2022
ரஷ்யாவின் ஜனாதிபதி புட்டின் எந்த அளவு அதிகாரம் மிக்கவராக உள்ளாரோ, அதனை விட கூடிய அதிகாரத்தில் உள்ளவர்கள் தான் கிரிம்பிளின் அதிகாரிகள். 2ம் உலகப் போரில் ஹிட்லர் ரஷ்யாவை கைப்பற்ற முனைந்த வேளை. ஜேர்மன் நாசி ராணுவத்திற்கு எதிராக ரஷ்யா சண்டையிட்ட வேளை தலை நகர் மொஸ்கோவில் நிறுவப்பட்ட கட்டடம் ஒன்றைத் தான் கிரிம்பிளின் என்று அழைப்பார்கள். 1948ம் ஆண்டு தொடக்கம், அது ஒரு அதிகாரம் மிக்க, தலைவர்களை கொண்ட அரசாட்சி இடமாக உள்ளது. தற்போது அந்த அதிகார பீடம், புட்டினை கொலை செய்ய முடிவு எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. ரஷ்யா போரில் பல பின்னடைவுகளை சந்தித்துள்ள அதேவேளை, பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனை சரிசெய்யவே முடியாத நிலை தோன்றியுள்ளது. இதனால் புட்டினை தீர்த்துக் கட்டி விட்டுஸ பின்னர் மேற்கு உலகத்தோடு ஒரு சமாதான போக்கை ..
கடைப் பிடித்தால் மாத்திரமே மீண்டும் ரஷ்யாவால் எழுச்சி பெற முடியும். சர்வதேச நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்க முடியும் என்று அந்த திகார மட்டம் கருதுகிறதாம். இதனால் அவர்கள் புட்டினுக்கு நஞ்சூட்ட தயாராகி விட்டார்கள் என்றும். ரஷ்யாவின் உளவு நிறுவன தலைவரை, தற்காலிகமாக எல்லாப் பொறுப்புகளை ஏற்க்குமாறும் அந்த அதிகார மட்டம் கேட்டுக் கொண்டதாம். இதனை அவரே புட்டினுக்கு தெரிவித்து விட்டார். இதனால் புட்டின் தன்னைச் சுற்றி ஒரு பெரும் பாதுகாப்பு அரனை கட்டி எழுப்பியுள்ளார் என்றும் மேலும் அறியப்படுகிறது.