யானை தந்தம் ஏன் மிகவும் விலை உயர்ந்தது? கோடிகள் கொடுக்கப்படுவது ஏன்?
06 Mar,2022
யானை தந்தம் ஏன் மிகவும் விலை உயர்ந்தது? கோடிகள் கொடுக்கப்படுவது ஏன்?
தந்தம் கடத்தப்படுவதாக அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். இதற்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும். ஆனால் நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா, ஏன் இவ்வளவு விலை கொடுத்து தந்தங்களை கடத்துகிறார்கள்? இவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது? என்று. மக்கள் பல கோடி ரூபாய் கொடுத்துகூட தந்தங்களை வாங்குவதற்கு மிக முக்கியமான சில காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது, தந்தங்கள் மதிப்பு மிக்க கலாச்சார அடையாளமாக சில நாடுகளில் பார்க்கப்படுகின்றன.
அத்தைகய தந்தங்கள் தேவைக்கு ஏற்ப கிடைக்காததால் அவற்றின் விலை கோடிகளுக்கு உயர்ந்து நிற்கிறது. இன்னும் சொல்லப் போனால் பல கோடிருபாய் மதிப்பில் அவை விற்கப்படுகின்றன. அவ்வளவு விலை கொடுத்து வாங்க தாயாராக இருந்தும், தந்தம் வேண்டும் என நினைக்கும் மக்களுக்கு தந்தங்கள் கிடைப்பதில்லை. சந்தையில் டிமாண்ட் அதிகமாக இருப்பதை வைத்து அவற்றின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தந்தம் கடத்தலுக்கு கடுமையான தண்டனைகள் உள்ளன. வனத்துறையினர் மிக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு தந்தக் கடத்தலை தடுத்து வருகின்றனர்.
அப்படி இருந்தும் மேற்கு வங்க மாநில வனப்பகுதியில் 17 கிலோ தந்தம் கண்டெடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த தந்தங்களை கண்டுபிடித்த வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இருந்தபோதும் தந்தக்கடத்தல் கும்பல் சிக்கவில்லை. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் யானைகள் வேட்டையாடப்பட்டு, அவற்றில் இருந்து எடுக்கப்படும் தந்தங்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அண்டர்வேர்ல்டு எனப்படும் கள்ளச் சந்தையில் தந்த ஏற்றுமதி இன்றளவும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. மேற்கு வங்கத்தில் கண்டுபிடிக்க தந்தங்களின் மதிப்பு சுமார் ஒரு கோடியே 70 லட்சம் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதன்மூலம் கணக்கிட்டால் ஒரு கிலோ தந்தத்தின் விலை 10 லட்சம் ரூபாய். பணத்துக்கு ஆசைப்பட்டு யானைகள் வேட்டையாடுவது அதிகரித்ததால் தந்தம் ஏற்றுமதிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், சில சமூகவிரோதிகளால் யானைகள் இன்றும் கொல்லப்பட்டு கள்ளச்சந்தையில் தந்தங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.