ரஷ்யப் பணப் பரிவர்த்தனைக்கு மாஸ்டர் கார்ட் தடை மாஸ்டர் கார்ட்
03 Mar,2022
ரஷ்யாவில் இருந்து மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்னைகளுக்கு மாஸ்டர்கார்ட் நிறுவனம் தடை விதித்துள்ளது.
ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்விஃப்ட் பரிவர்த்தனை முறையில் இருந்து ரஷ்யாவை விலக்கப் போவதாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் கனடா உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே அறிவித்துள்ளன. இதனால் ரஷ்யாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணப் பரிவர்த்தனை மேற்கொள்வது முடங்கும் எனக் கருதப்படுகிறது.
முக்கிய சாராம்சம்
யுக்ரேன் தலைநகர் கீயவில் ரஷ்ய படையினர் 40 மைல்கள் தொலைவுக்கு முன்னேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யுக்ரேன் தலைநகர் கீயவில் மீண்டும் ஒருமுறை வான் தாக்குதல் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பபட்டு வருகிறது. நகருக்கு வெளியே ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன.
யுக்ரேனின் கார்கீவில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் திங்கட்கிழமை அதிகாலையில் டஜன் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக யுக்ரேனிய உள்துறை தெரிவித்துள்ளது.
பெலாரூஸ் பேச்சுவார்த்தைக்கு முன்பாக யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி, ரஷ்ய படையினர் ஆயுதங்களை கீழே போடுமாறும் ஐரோப்பிய ஒன்றியம் யுக்ரேனுக்கு உறுப்புரிமை வழங்குமாறும் கோரினார்