12 ஆண்டுகளுக்குப் பிறகு சேரும் சூரியன் குரு: இந்த ராசிக்காரர்களுக்கு பம்பர் பலன்கள்
25 Feb,2022
12 ஆண்டுகளுக்குப் பிறகு சேரும் சூரியன் குரு: இந்த ராசிக்காரர்களுக்கு பம்பர் பலன்கள்
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியனும், அதிஷ்ட கிரகமாக கருதப்படும் வியாழனும் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசியில் இணைய உள்ளனர். இந்த யோகம் பெரிய மாற்றங்களை கொண்டு வரும்.
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இந்த சேர்க்கையானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலனையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் ஏற்படுத்தும். இந்த நிலை 2022 மார்ச் 15 வரை நீடிக்கும். வியாழன் - சூரியன் சேர்க்கை எந்த ராசிக்கு நல்ல பலன்களைத் தரும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இக்காலம் நல்ல நிதி நிலை முன்னேற்றத்தை அளிக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் ஆதரவாக இருக்கும். மேஷ ராசிக்காரர்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய வேலைகளைத் தொடங்க இது நல்ல நேரமாகும்.
மேலும் படிக்க | இன்று முதல் இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம்: சனி உதயத்தால் தொட்டது துலங்கும்
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு வியாழன் - சூரியன் சேர்க்கை பல நல்ல பலன்களைத் தரும். கூட்டுப் பணிகளில் அதிக லாபம் கிடைக்கும். சிலருக்கு, இந்த நேரம் அவர்களை தொழிலின் உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு மார்ச் 15 வரையிலான காலம் காதல் வாழ்க்கைக்கு சிறப்பாக இருக்கும். காதல் ஜோடிகளுக்கு திருமண யோகம் கிடைக்கும். திருமணமான தம்பதிகளின் வாழ்க்கை காதல் நிறைந்ததாக இருக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் குரு பகவான் இணைவதால் புதிய இலக்குகள் எட்டப்படும். ஒன்றன் பின் ஒன்றாக வெற்றி கிடைக்கும். நம்பிக்கை அதிகமாக இருக்கும். தனுசு ராசிக்கார்ரகள் இந்த காலத்தில் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடந்து முடிக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை