பெண்களின் உடல் அழகை, மெருகேற்றி காட்டுவதில் மார்பகம் முக்கிய பங்கு வகிக்கிறது.அவற்றை, பெரிதாக்க சில எளிமையான வழிமுறைகள். ஆனால், சில பெண்களுக்கு அரிதாக மார்பு வளர்ச்சி சீராக இருக்காது. பருவமடைதலுக்கு பிறகும் மார்பகம் மிகச்சிறியதாக இருக்கும். பல பெண்கள் தனக்கு மார்பகம் சிறியதாக இருப்பதை நினைத்து வருத்தம் கொள்வது இயல்பான ஒன்றுதான். அதிலும், திருமணமான பெண்கள் அதிக அளவில் வருத்தம் கொள்வர். பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களை தான் ஆண்களுக்கு பிடிக்கும் என்று பெண்கள் நினைப்பதால் தான் மார்பகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உறுதியான மிருதுவான மார்பகங்கள் பெற விரும்ப காரணமே அதன் ஈர்ப்புத்தன்மை தான்.
மார்பகத்தின் அளவு குறைந்து இருப்பதற்கு, ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் தேவையான அளவு சுரக்காமல் இருப்பதே காரணமாகும்..இந்த ஈஸ்ட்ரோஜன் இயல்பாக சுரக்க பல இயற்கை நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ணுவதும் பலனளிக்கும்.
பால், பப்பாளி, வெந்தய விதைகள், பெருஞ்சீரக விதைகள், ஆளி விதைகள், கொட்டைகள், சோய் பீன் போன்றவற்வை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதை தவிர்த்து, மணத்தக்காளி கீரையை பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்து, சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாய் கீறி போட்டு தாளித்து சாப்பிட்டு வரவும்.
மார்பகங்கள் அமைந்துள்ள பெக்டோராலிஸ் தசையை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்யும் பொழுது ஓரளவு மார்பகங்கள் பெரிதாகும். அது போல அவரவருக்குப் பொருத்தமான உள்ளாடைகளை தேர்ந்தெடுத்து அணியும் பொழுதும் ஓரளவு சரியாகும். இப்போது உள்ளாடைகளிலேயே மார்பகங்களை பெரிதாக காட்டக்கூடிய அமைப்புடன் கூடிய உள்ளாடைகள் வருகின்றன அதையும் பயன்படுத்தலாம்.
நிச்சயமாக பலனளிக்கக் கூடிய சிகிச்சை என்றால் அது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தான். இது முக்கியமாக மார்பகங்களில் புற்றுநோய் வந்து எடுக்கவேண்டிய சூழ்நிலை வருபவர்களுக்கு செய்யப்படுகிறது .இந்த சிகிச்சையில் சிலிக்கான் இம்ப்ளாண்ட் எனப்படும் பொருளை மார்பகங்களில் வைத்து பெரிதாக்குகிறது. ஆனால், திருமணம், கர்ப்பம், குழந்தை பிறப்பது போன்றவற்றை முடித்தவர்களுக்கு தான் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இதை தவிர்த்து தவிர்த்து, ஆரம்ப கட்டத்தில் சில மூலிகைகள் மூலம் மார்பகத்தை வளர்க்கலாம். இவை பாதுகாப்பானது, பக்கவிளைவுகள் இல்லாதவை ஆகும்.
சோயா பீன் எண்ணெய் மசாஜ்:
இந்த எண்ணெயை உள்ளங்கையில் விட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வரை வட்ட இயக்கத்தில் மார்பகங்களை மசாஜ் செய்யவும். சோயா பீன் எண்ணெய் சோயா விதைகளிலிருந்து எடுக்கப்படுகிறது. உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கும். இது மார்பகஙளின் அளவை அதிகரிக்க செய்யும். மேலும், எலுமிச்சை எண்ணெய் மசாஜ் இதே போன்று மேற்கொள்ளலாம். ஆனால், சில க்ரீம்களையும் உபயோகப்படுத்தி மசாஜ் செய்வதன் மூலம் மார்பகங்களின் அளவை அதிகப்படுத்தலாம் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. அவற்றில் முற்றிலும் உண்மை இல்லை.