ஒரு மூதாட்டியின் உடல், இறந்த இரண்டு ஆண்டு ஆண்டுகளுக்குப் பின், வீட்டில் டேபிளில் இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். வட இத்தாலியில் இந்த சம்பவம் நடைபெற்றது. கோமோ என்ற ஏரியின் அருகில் உள்ள பிரெஸ்டினோ என்ற ஊரில், தனியாக வசித்து வந்தவர் மரிநெல்லா பெரேட்டா.
இத்தாலி காவல்துறை, 70 வயது முதியவரான இந்த பெண்மணியின் உடல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, பாதுகாக்கப்பட்ட நிலையில் டேபிளில் இருந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர். இறந்த பிறகும், இரண்டு ஆண்டுகளாக யாருமில்லாமல் இருந்த மூதாட்டியின் நிலை பரிதாபமாக காணப்படுகிறது. இந்த நிலை, நாட்டில் முதியவர்களை இன்னும் சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.
புயல் காற்று வீசிய நேரத்தில், பாதுகாப்புக்காக, இறந்த பெண்மணியின் கார்டனில் கவனிப்பாரற்றுக் கிடந்த மரங்களை நீக்குவதற்காக காவல்துறை மரிநெல்லாவுக்கு அழைப்பு விடுத்தது. அப்போது தான் அவரது உடல் இருப்பது கண்டறியப்பட்டது.
மரினெல்லா தனித்திருந்தாலும், சுற்றுப்புறத்தில் யாருமே இல்லையா என்ற கேள்வி எழலாம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக, அவரை சுற்றுப்புறத்தில் இருக்கும் பார்க்கவில்லை என்று அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.
இதனிடையில், மரினெல்லா கோமாவில் இருந்துள்ளார் என்ற தகவலும் வெளியானது. கோமோவில் இருந்த 70 வயது பெண்மணிக்கு என்ன நடந்தது, அவரின் தனிமையை மற்றவர்கள் மறந்து விட்டனரா என்று கேள்விகளுக்கு பதில் கண்டறிய முடியாமல் எங்கள் மனசாட்சி காயப்படுத்துகிறது என்று குடும்ப நல அமைச்சர் எலெனா போனட்டி பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
"ஒற்றுமையாக இருக்கும் ஒரு சமூகமாக, ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நினைவுகூர வேண்டிய கடமை நமக்கு உள்ளது. யாருமே தனித்து விடப்படக்கூடாது" என்றும் அவர் கூறினார்.
இத்தாலியில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களில், கிட்டத்தட்ட 40 சதவீதத்தினர் தனியாகத்தான் வாழ்கின்றனர் என்று ISTAT 2018-ன் அறிக்கை தெரிவித்துள்ளது. அதே போல, தேவை ஏற்படும் நேரத்திலும், அவர்கள் தொடர்பு கொள்ள எந்த உறவினர்களோ நண்பர்களோ இல்லை என்றும் அறிக்கையில் உள்ளது.
இத்தாலியின் தற்போது குழப்பமான, கிளைகள் நிறைந்த குடும்பங்களின் நினைவுகள் தன பலருக்கும் உள்ளன. நவீன குடும்பங்களும் குறைந்துள்ளது. இதனால், பலரும் தனியாக இறக்கிறார்கள். அதே போல, நாங்களும் தனியாக வாழ்வதும் மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் கூறினார்.
செப்டம்பர் 2019 முதல் மரினெல்லாவை யாருமே பார்க்கவில்லை என்று அக்கம்பக்கத்தினர் கூறினார்கள். 2020 இல் வடக்கு இத்தாலியில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, அவர் வேறு இடத்துக்குச் சென்றிருக்கலாம் என்று அவர்கள் நினைத்தனர்.
காவல்துறை விசாரணை மற்றும் ஆய்வில், சம்பவ இடத்தில் தவறாக எதுவும் நடக்கவில்லை என்று கூறியது. அவரது இறுதிச் சடங்கு மற்றும் அடக்கம் செய்ய கவுன்சில் பணம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
"இதில் உண்மையான வருத்தம் என்னவென்றால், மற்றவர்கள் அவரின் மரணத்தைக் கவனிக்கவில்லை என்பது அல்ல. மரினெல்லா உயிருடன் இருந்ததையே அவர்கள் உணரவில்லை என்பது தான்." மூடிய கதவுகளுக்குப் பின்னே மரினெல்லாவின் யாரும் அறியாத மர்ம வாழ்க்கை எங்களுக்கு பயங்கரமான பாடத்தைக் கற்பித்துள்ளது என்று இத்தாலிய நாளிதழ் கூறியது.