கார குழிப்பணியாரம்!
08 Feb,2022
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
இட்லி அரிசி - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 முதல் 4,
கறிவேப்பிலை - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
சிறிய வெங்காயம் - 20
சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்.
recommended by
Mgid
Mgid
AMAZON TRADER
This Young Fredericia Family Now Makes $15,800 Per Month With Amazon
LEARN MORE
செய்முறை:
அரிசி, உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து ஊற வைத்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். உப்பு, சமையல் சோடா சேர்த்து கரைத்து 10 முதல் 12 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்.
கடாயில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய் துருவல், வெங்காயத்தை வதக்கி பணியார மாவில் சேர்க்கவும்.
பணியாரக் கல்லை சூடாக்கி, குழிகளில் சிறிதளவு எண்ணெய் விட்டு, மாவை ஊற்றி, மூடி வைத்து வேக விடவும். பின்னர், அடிப்பக்கம் மேலாக திருப்பி வேகவைத்தால் சுவையான கார குழிப்பணியாரம் தயார். இதனை சட்னியுடன் பரிமாறவும்.