மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கக்கூடாத பொருட்கள்: எச்சரிக்கை பதிவு!
06 Feb,2022
மைக்ரோவேவில் நீங்கள் சிக்கன் அல்லது சிக்கன் சேர்த்து செய்யப்படும் எந்த உணவுப் பொருட்களையும் சூடு செய்யக் கூடாது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்பட்ட மைக்ரோவேவ், இன்று கிட்டத்தட்ட பெரும்பாலான வீடுகளில் இருப்பதைக் காணமுடிகிறது. மைக்ரோவேவ் சமையலை எளிதாக்குகிறது மற்றும் துரிதப்படுத்துகிறது.
மேலும் சமைப்பதற்கு மட்டுமின்றி உணவை சூடுபடுத்தவும் மைக்ரோவேவ் ஓவன் பலர் வீட்டில் பயன்படுத்தப்படுகிறது. சில குறிப்பிட்ட உணவு வகைகளை மைக்ரோவேவில் தான் செய்ய முடியும்.
ஆனால் எல்லா உணவுகளையும் மைக்ரோவேவ் ஓவனில் செய்து பார்க்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஒரு சில உணவுகளை மைக்ரோவேவ் ஓவனில் எப்போதும் செய்யக்கூடாது. அந்த உணவு வகைகளின் பட்டியல் இங்கே.
சிக்கன் : மைக்ரோவேவில் நீங்கள் சிக்கன் அல்லது சிக்கன் சேர்த்து செய்யப்படும் எந்த உணவுப் பொருட்களையும் சூடு செய்யக் கூடாது. அப்படி செய்தால் அதில் இருக்கும் புரதச்சத்து குறைந்து விடும். அது மட்டுமின்றி, சுவையும் குறையும். இதனால் தான் எப்பொழுதுமே சிக்கனை சூடு படுத்த மைக்ரோவேவவைப் பயன்படுத்தக் கூடாது என்று பலரும் கூறுகிறார்கள்.
முட்டைகள் : ஒரு சில நிமிடங்களில் பல இனிப்பு வகைகளை மைக்ரோவேவ் அவனில் செய்துவிடலாம். கடினமான உணவுகளையே சமைக்கிரோமே, முட்டைகளை சமைக்க முடியாதா என்று பலரும் அவசரத்தில் முட்டையை மைக்ரோ ஓவனில் வேக வைப்பார்கள். ஆனால் மைக்ரோவேவ் ஓவனின் இன்ப்ரா ரெட் கதிர்களின் அடிப்படையில் செயல்படுவதால், முட்டையில் இருக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்களை இழந்துவிடும் எனவே முட்டையை எப்போதுமே மைக்ரோவேவ் ஓவனில் வேக வைக்கக்கூடாது.
எண்ணெயை சூடு செய்வது : முட்டையைப் போலவே மைக்ரோவேவில் எண்ணையை எப்போதுமே சூடு படுத்த கூடாது. அனைத்து எண்ணெய் வகைகளுக்கும் இது பொருந்தும். எண்ணையை ஓவனில் சூடாக்கும் பொழுது அதில் இருக்கும் நல்ல கொழுப்பு நீங்கிவிடுகிறது. அதேபோல அதில் இருக்கும் வெப்ப கதிர்கள் கெட்ட கொழுப்பினை உருவாக்கி, நச்சுத்தன்மை நிறைந்ததாக வெளிப்படுத்துகிறது. எனவே நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய் நச்சுத் தன்மை நிறைந்ததாக மாறும்.
காளான்கள் : ஓவன் பயன்படுத்தும் பொழுது ஒரு சில குறிப்பிட்ட உணவுகள் அதன் சத்துக்களை இழக்கும் என்பது ஒரு சிலர் மட்டுமே அறிந்தது. அந்தப் பட்டியலில் காளானும் உள்ளது. எப்போதுமே மைக்ரோவேவ் ஓவனில் காளானை சமைக்கக் கூடாது. அது உணவை நஞ்சாக்கும்.
அரிசி : அரிசி சாதம் செய்வது ஒரு கலை. சாதம் உதிர் உதிராக, குழையாமல் அதே சமயத்தில் பதமாக வெந்திருக்க வேண்டும். பல உணவு வகைகளை எளிதாக ஓவனில் சமைப்பது போல அரிசியையும் சிலர் செய்கிறார்கள். ஆனால் அரிசியை ஓவனில் சமைத்தால் ஃபுட் பாய்சன் ஏற்படும் ஆபத்து உள்ளது. அரிசி நச்சுத்தன்மை கொண்டதாக மாறிவிடும்.