24 அமெரிக்க கமாண்டோகள்ஸ எப்படி இறங்கினார்கள்- கடைசியில் வெடித்த குண்டுஸ ரிப்போட் ..
04 Feb,2022
நேற்று(03)சிரிய நாட்டில், அட் மேஷ் என்ற இடத்தில் உள்ள சிறிய கிராமம் அது. அங்கே ஒதுக்குப் புறமாக இருக்கும் ஒரு 3 மாடிக் கட்டத்தில் தான், ஐ.எஸ் தலைவர் அபு இப்ரஹிம் இருக்கிறார் என்பதனை அமெரிக்க சி.ஐ.ஏ உறுதி செய்கிறது. டாகஹக் என்று அழைக்கப்படும், அதி வேக தாக்குதல் ஹெலிகள் அந்த இடம் நோக்கி விரைகிறது. மிக மிக தாளப் பறந்ததால், சிரிய நாட்டு ராடர் திரைகளில் இருந்து அமெரிக்க ஹெலிகள் தப்பியது. அதில் 24 அமெரிக்க கமாண்டோக்கள் இருந்துள்ளார்கள். திடீரென குறித்த வீட்டின் கூரையில் ஒரு தொகுதி படைகள் குதிக்க. ஏனையவர்கள் நிலதில் இறங்கி வீடு நோக்கி முன்னேற ஆரம்பித்தார்கள். ஆனால் ஹெலியின் சத்தம் கேட்ட உடனே, விழித்துக் கொண்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் உடனே தாக்க ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே பின் லேடனுக்கு என்ன நடந்தது என்பது அவர்களுக்கு நினைவில் இருக்கும் அல்லவா ? நடு நிசி 1 மணிக்கு தாக்குதல் ஆரம்பிக்கிறதுஸ
இரவு நேர பார்வை சாதம் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் அங்கே பறந்து முழு தகவலையும் வீடியோவாக எடுத்து தலைமைக்கு அனுப்ப. தலைமை நிலையத்தில் இருந்து நேரடி கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது. பின் லேடனை போட்டுத் தள்ளும் போது, பராக் ஒபாமா எப்படி அதனை வீடியோவில் பார்த்தாரோ. அது போல இந்த நடவடிக்கையையும் அமெரிக அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹரிஸ் ஆகியோ வீடியோவாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சுமார் 2 மணி நேரமாக சண்டை நடக்கிறது. சிறு பிள்ளைகளை மனிதக் கேடயமாக ஐ.எஸ் பயன்படுத்தியது. இதனால் முதலாவது மாடிக்குச் செல்ல சற்று தாமதம் ஆனது. ஆனால் அனைத்து பிள்ளைகளையும் அமெரிக்க படைகள் உயிரோடு மீட்டுவிட்டார்கள். இன் நிலையில் அவர்கள் சென்ற ஒரு ஹெலிகொப்டர் பழுதடையவே. அதனை அருகில் தரை இறக்கினார் விமானி. இதனை அடுத்து அந்த ஹெலியை வெடி குண்டு வைத்து தகர்கிறார்கள் அமெரிக்க கமாண்டோ படையினர்.
அப்படியே முன்னேறி 2ம் மாடிக்கு செல்கிறார்கள். 3ம் மாடியில் இருந்து அமெரிக்க படைகள் தாக்கிய அதேவேளை, 2ம் மாடியில் இருந்தும் தாக்குதல் ஆரம்பிக்கவேஸ இனி தப்பவே முடியாது என்று ஐ.எஸ் தலைவர் அபு இப்ரஹிமுக்கு தெரிய வருகிறது. அவர் தனது குடும்பத்தை ஒரு அறைக்குள் அழைக்கிறார். அங்கே இருந்த பாரிய குண்டு ஒன்றை வெடிக்க வைத்து, தற்கொலை செய்து கொள்கிறார். இதனை அறிந்த அமெரிக்க படைகள், ஏனைய காவலாளியான ஐ.எஸ் தீவிரவாதிகளை சுட்டுக் கொல்கிறார்கள். இதேவேளை சிலர் சரணடைந்தும் உள்ளார்கள். பேக்-அப்புக்கு வந்த மேலும் 2 ஹெலியை பயன்படுத்தி, அங்கிருந்து அனைவரும் பாதுகாப்பாக அமெரிக்க தளம் நோக்கிச் சென்றுவிட்டார்கள். ஆப்பரேஷன் சக்சஸ்ஸ. குறிவைத்த விடையம் முடிந்து விட்டது.