அசாஞ்சேவுக்கு கோர்ட் அனுமதி
25 Jan,2022
அமெரிக்க ராணுவத்தின் ரகசிய உளவு தகவல்களை 'விக்கிலீக்ஸ்' என்ற பெயரில் வெளியிட்டதாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே, 50, மீது அமெரிக்காவில் பல வழக்குகள் உள்ளன.
பிரிட்டனின் லண்டனில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.அமெரிக்காவுக்கு அவரை நாடு கடத்துவதற்கு, பிரிட்டனில் உள்ள கீழ் நீதிமன்றம் கடந்தாண்டு அனுமதி அளித்தது. அதை எதிர்த்து, லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் அசாஞ்சே சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதை விசாரித்த உயர் நீதிமன்றம், நாடு கடத்த அனுமதி அளிக்கும் கீழ் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.