ஆப்கானிஸ்தானில் கடும் பஞ்சம் ; நார்வேயிடம் தலீபான்கள் பேச்சுவார்த்தை
24 Jan,2022
தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் மக்கள் பசியும், பட்டினியுமாக இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவினாலும் ஆப்கானிஸ்தானின் உணவுப்பற்றாக் குறையை இன்னமும் தீர்க்க இயலவில்லை. லட்சக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து இன்மையால் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.
கடும் பஞ்சத்தால் ஆப்கானிஸ்தான் தத்தளிக்கும் நிலையில், தங்களுக்கு உதவுமாறு நார்வே நாட்டிடம் தலீபான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதற்காக ஆப்கானிஸ்தான் வெளியுறவு மந்திரி அமீர் கான் தலைமையில் குழு ஒன்று நார்வே சென்றுள்ளது. தலீபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு இதுபோன்ற பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.