ஷிஃப்ட் முடிஞ்சு போச்சு, விமானத்தை ஓட்டமுடியாது..!’ அடம்பிடித்த விமானி -
21 Jan,2022
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வரவேண்டிய விமானத்தை, தனது ஷிஃப்ட் முடிஞ்சு போச்சு என கூறி சவுதி அரேபியாவில் பாதி வழியிலேயே நிறுத்திவிட்டு விமானி ஒருவர் கிளம்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானத்தை நிறுத்திவிட்டு விமானி சென்றதால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தான் நாட்டின் தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் (PK-9754 ) ஒன்று ரியாத் நகரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டது. இடையே வானிலை மோசமடைந்ததால், சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அந்த விமானத்தை விமானி எமர்ஜென்ஸி லேண்டிங் செய்து அவசரமாக தரையிறக்கினார்.
பின்னர் வானிலை சரியானதால் விமானம் இஸ்லாமாபாத்துக்கு புறப்படும் என நினைத்த பயணிகளுக்கு விமானி அதிர்ச்சியளித்தார். தனது வேலை நேரம் (Flying Hours) நிறைவடைந்துவிட்டதாக கூறிய அவர் மேற்கொண்டு விமானத்தை தன்னால் இயக்க முடியாது என கூறி விமானத்தை இயக்க மறுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.