உக்கிரைனுக்கு அனுப்பும் பிரித்தானியா: ரஷ்யாவுடன் நேரடியாக மோதவுள்ள படைகள்
21 Jan,2022
..
உக்கிரைன் நாட்டை கைப்பற்ற ரஷ்யா தனது படைகளை நகர்த்தி வரும் நிலையில். அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உக்கிரைனுக்கு பல உதவிகளை செய்து வருகிறது. ஏற்கனவே வேவு பார்க்கும் படைப் பிரிவு ஒன்றை பிரித்தானியா உக்கிரைக்கு அனுப்பியுள்ள நிலையில். ரஷ்யா முன்னேறினால் கடும் தாக்குதல் தொடுக்கும் வகையில், தனது படைகளையும் உக்கிரைனுக்கு அனுப்ப திட்டம் தீட்டியுள்ளது. இதனூடாக நூற்றுக் கணக்கான பிரித்தானிய படையினர், தற்போது உக்கிரைன் செல்ல உள்ளார்கள். ஓசை படாமல் மெதுவாக உக்கிரைனை கைப்பற்ற முடியும் என்று திட்டம் தீட்டிய ரஷ்யா தலையில் மண் விழுந்துள்ளது. நேச நாடுகள் உக்கிரைனுக்கு பல உதவிகளை செய்து வருகிறது. இது இவ்வாறு இருக்க..
சுமார் 9 லட்சம் படைகளை உக்கிரை திரட்டியுள்ளது. உக்கிரைன் நாட்டில் உள்ள லட்சக் கணக்கான இளைஞர்கள் தமது நாட்டை காப்பாற்ற படைகளில் இணைந்து வருகிறார்கள். அந்த வகையில் துணை பாதுகாப்பு படை ஒன்றை உக்கிரைன் உருவாக்கியுள்ளது. அதில் 9 லட்சம் இளைஞர்கள் இணைந்துள்ளார்கள். இதுவும் ரஷ்யாவின் வயிற்றில் புளியைக் கரைக்கும் விடையமாக உள்ளது. பின் வாங்கினால், ரஷ்யா பயந்து விட்டது என்பார்கள், போரில் தோற்றால் ரஷ்யாவின் ஆற்றல் பற்றாது என்பார்கள். ரஷ்யா என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளது.