வெப்பம் நிறைந்த பாலைவனத்தில் பனி! சகாராவில் மைனஸ் 2 டிகிரி
19 Jan,2022
பூமியில் மிகவும் வெப்பம் மிகுந்த பகுதி பகுதிகளில் ஒன்று சகாரா பாலைவனமாகும். எப்போதும் அனல் காற்றுடன் அதிக வெப்பம் சூழ்ந்து கானப்படும் சகாரா பாலைவனத்தில் தற்போது பனி சூழ்ந்துள்ளது.
பாலைவனத்தில் நிலவும் தட்பவெப்ப சூழல் காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. பனி சூழ்ந்த நிலப்பரப்பினை புகைப்படக்கலைஞர் ஒருவர் தனது கேமராவின் மூலம் புகைப்படம் எடுத்துள்ளார்.
ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய பாலைவனமான சகாராவில் அதிகபட்சம் 58 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை பதிவாகியுள்ளது. தற்போது அங்கு மைனஸ் 2 டிகிரி செல்சியசுக்கு கீழ் வெப்பம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.