இரத்தப்போக்கு வைரஸ்கள் (BBV கள்) என்றால் என்ன?
STI மற்றும் BBV எவ்வாறு பரவுகின்றன?
பாலியல் ரீதியாக பரவக்கூடிய ந�ோய்த்தொற்றுகள் முக்கியமாக அந்த ந�ோய்த்தொற்று உள்ள
ஒருவருடன் உடலுறவு கொள்வதால் பரவுகிறது. ந�ோய்த்தொற்றுகள் வழக்கமாக இந்த பாலியல்
திரவங்கள் மூலம் பரவுகின்றன:
• விந்து (கம்)
• யோனி திரவங்கள்
• குதவழி திரவங்கள் (ஒரு நபரின் அடிப்பகுதியிலிருந்து)
பல வகையான STI க்கள் உள்ளன:
‘இரத்தத்தால் பரவும்’ என்பது இரத்தத்தில் ந�ோய்த்தொற்று உள்ளதாகும். பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம்
உங்கள் இரத்தத்தில் நுழையும் போது BBV கள் முக்கியமாக பரவுகின்றன.
சில BBV க்கள் STI க்களும் கூட. உதாரணமாக, மனித ந�ோயெதிர்ப்புத் திறன் வைரஸ் (எச்.ஐ.வி)
இரத்தத் தொடர்பு மற்றும் பாலியல் திரவங்கள் மூலம் பரவலாம்.
• வைரஸ்கள் (உதாரணமாக: ஹெர்பிஸ் மற்றும் HPV)
• பாக்டீரியா (உதாரணமாக: கிளமிடியா, கோனோரியா மற்றும் சிஃபிலிஸ்)
• ஒட்டுண்ணிகள் (உதாரணமாக: ட்ரைகோமோனாஸ்)
• பூச்சிகள் (உதாரணமாக பொச்சுப் பேன்)
சில ந�ோய்த்தொற்றுகள் குணப்படுத்தப்படலாம், சில தாமாகவே குணமாகலாம்.
மற்றவை வாழ்நாள் முழுவதும் நீடிக்கலாம். ந�ோய்த்தொற்றிலிருந்து உங்களை
பாதுகாத்துக் கொள்ள நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் உள்ளன.
STI க்கள் மற்றும் BBV களைப் பெறுவதற்கான ஆபத்தை நான்
எவ்வாறு குறைக்க முடியும்?
STI க்களால் நீங்கள் பாதிக்கப் படும் ஆபத்தை பாதுகாப்பான உடலுறவு மூலம் குறைக்கலாம்.
பாதுகாப்பான உடலுறவு என்பது எந்த வகையான உடலுறவின் (யோனி வழி, குத வழி மற்றும் வாய்
வழி) போதும் தடைகளை பயன்படுத்துவது, உதாரணமாக ஆணுறை.
பாலியல் பொம்மைகளை பகிர்ந்துக் கொண்டால் ஒரு புதிய ஆணுறை தேவை.
STI களை தடுப்பதில் ஆணுறைகள் 100% பயனுள்ளவை அல்ல. பரிசோதனையைப் பற்றி உங்கள்
மருத்துவர் அல்லது நர்ஸிடம் பேசுங்கள்.
பாலியல் ரீதியாக பரவக்கூடிய ந�ோய்த்தொற்றுகள் (STIs) மற்றும்
இரத்தப்போக்கு வைரஸ்கள் (BBV கள்) என்றால் என்ன?
STI கள் மற்றும் BBV களில் இருந்து உங்களை
பாதுகாத்துக் கொள்ள ஆணுறை அணியுங்கள்
ஒரு STI அல்லது BBV எனக்கு
உள்ளதா என்பதை நான் எவ்வாறு
அறிந்துக் கொள்ள முடியும்?
சீரான இடைவெளிகளில் பரிசோதனை செய்துக்
கொள்வதே உங்களுக்கு STI அல்லது BBV
உள்ளதா என்று அறிந்துக் கொள்வதற்கு சிறந்த
வழி
தங்களுக்கு அறிகுறிகள் ஏதும் இல்லாதலால்
பலருக்கு அவர்களுக்கு ஒரு STI அல்லது BBV
உள்ளதா என்றே தெரியாது. சிலருக்கு கீழ்கண்ட
அறிகுறிகள் போல் இருக்கலாம் :
• யோனி, ஆண்குறி அல்லது குதம் சுற்றி
அரித்தல்
• மூத்திரம் (மலம்) கழிக்கும் பொழுது வலி
• யோனி, ஆண்குறி அல்லது குதத்திலிருந்து
நாற்றமுள்ள அல்லது விசித்திரமான வண்ணம்
கொண்ட வெளியேற்றம் (திரவம்)
• உடலுறவு கொள்ளும் பொழுது வலி
• யோனியில் அசாதாரண இரத்தப்போக்கு BBVக்கள் பரவும் வழிகளைப் பற்றிய படங்கள்]
STI க்கள் மற்றும் BBV களைப் பெறுவதற்கான ஆபத்தை நான்
எவ்வாறு குறைக்க முடியும்?
BBV களால் நீங்கள் பாதிக்கப் படும் ஆபத்தை இவை மூலம் குறைக்கலாம்:
• சீரான இடைவெளிகளில் பரிசோதனை மூலம்
• ஒவ்வொறு முறை உடலுறவு கொள்ளும் போதும் சரியான முறையில் ஆணுறை உபயோகிப்பதின்
மூலம் (யோனி வழி, குத வழி மற்றும் வாய் வழி)
• ப்ரெப் பற்றி உங்கள் மருத்துவர் அல்லது நர்ஸிடம் பேசுங்கள்.
• ஊசி உபகரணங்கள், ரேசர்கள், நகக் க்ளிப்பர்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது மற்றும்
ஒழுங்குபடுத்தப்பட்ட இடங்களில் மட்டுமே பச்சை மற்றும் துளைகள் குத்திக்கொள்வது
பாலியல் ரீதியாக பரவக்கூடிய ந�ோய்த்தொற்றுகள் (STIs) மற்றும்
இரத்தப்போக்கு வைரஸ்கள் (BBV கள்) என்றால் என்ன?
STI அல்லது BBVக்கான பரிச�ோதனை நான் எத்தனை முறை
மேற்கொள்ள வேண்டும்?
• 100% நேரம் ஆணுறைகளை உபயோகித்தாலும், நீங்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால்,
ஒரு வருடத்திற்கு ஒரு முறை சோதிக்கவும்
• நீங்கள் மற்ற ஆண்களுடன் உடலுறவு வைத்திருக்கும் ஆணாக இருந்தால், உங்களுடைய
ஆபத்தை பொறுத்து, 3 மாதங்களுக்கு ஒரு முறை சோதித்துப் பாருங்கள்
• ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் கூடிய சீக்கிரம்
• நீங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக கவலையாக இருந்தால்
STI அல்லது BBV எனக்கு இருப்பதாக நான் நினைத்தால் நான்
என்ன செய்வது?
நீங்கள் ஒரு STI அல்லது BBV உங்களுக்கு இருப்பதாக நினைத்தால், உங்கள் மருத்துவர் அல்லது
நர்ஸிடம் தேவைப்பட்டால் பரிசோதனைகள் செய்து சிகிச்சைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
சிகிச்சையளிக்கப்படாவிட்டால் சில ந�ோய்த்தாக்கங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை
ஏற்படுத்தும். உதாரணமாக, சிகிச்சையளிக்கப்படாத ந�ோய்த்தொற்றுகள் கருவுறாமைக்கு
வழிவகுக்கலாம் (குழந்தைகள் பெற இயலாமை). ஆரம்பத்தில் கண்டுப்பிடித்தால் பல STI க்களுக்கு
எளிதில் சிகிச்சையளிக்கப்படலாம்.
பாதுகாப்பான உடலுறவுக் கொள்ளுங்கள் மற்றும் உங்கள் உடலில் அல்லது வேறு ஒருவரின் உடலில்
இரத்தம் செலுத்தக்கூடிய எந்த உபகரணத்தையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பொறுத்து, இதுபோன்ற பொதுத் தகவலின் பொருத்தமானது நபர் நபருக்கு மாறுபடும். உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கு
குறிப்பிட்ட மருத்துவ அல்லது சட்ட ஆலோசனையை நீங்கள் பெற வேண்டும்.
நபருக்கு (அல்லது
துணைவருக்கு) ஒரு STI
அல்லது ஒரு BBV உள்ளதாக
கண்டறியப்பட்டால் நான் என்ன
செய்ய வேண்டும்?
உங்களுக்கு, நீங்கள் உடலுறவு கொள்ளூம்
துணைவருக்கு ஒரு STI அல்லது BBV
உள்ளதென்று கண்டறியப்பட்டிருப்பதாக ஒரு
தொலைபேசி அழைப்பு, உரை செய்தி, கடிதம்
அல்லது மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு
அறிவிக்கப்படலாம்.
உங்களுக்கும் ந�ோய்த்தொற்று ஏற்பட்டு,
அறிகுறிகள் ஏதும் இல்லாத காரணத்தால்,
நீங்கள் அதைப் பற்றி அறியாமலும் இருக்கலாம்.
உங்கள் மருத்துவர் அல்லது நர்ஸைப் பார்த்து
தேவைப்பட்டால் பரிசோதனைகள் செய்து
சிகிச்சைப் பெற்றுக் கொள்ளுங்கள