. பிரபல நாட்டில் பதிவான வினோதமான வேற்றுக்கிரகவாசி வழக்கு.!
29 Dec,2021
அயர்லாந்தில் இந்த ஆண்டு வேற்றுகிரகவாசிகளை பார்த்ததாக 8 வினோத வழக்குகள் பதிவாகி உள்ளது. ஜனவரி 17-ஆம் தேதி வெளியான ஒரு செய்தி அறிக்கையில், ஒரு உள்ளூர் நபர் விண்கலம் மற்றும் வானத்தில் தோன்றிய ஒளிரும் விளக்குகள் பற்றி தெரிவித்தார். இதற்குப் பிறகு மே மாதத்தில் மகாபெரி பகுதியில் ஹெலிகாப்டர் காணப்பட்டதை தொடர்ந்து வெள்ளை ஒலி காணப்பட்டது என உள்ளூரில் 2 காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் ஜூன் மாதத்திற்குப் பின்னர் உள்ளூரில் வசிக்கும் 1 நபர் தனது படுக்கை அறையில் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாக காவல் துறைக்கு புகார் கொடுத்தார்.
ஆனால் இது எந்த சர்வதேச செய்திகளிலும் விவாதிக்கப்படவில்லை. ஜூலை மாதம் நியூடவுன்பி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிசிடிவி யில் ஒரு வித்தியாசமான உருவம் வருவது போன்ற காட்சிகள் காவல்துறையினருக்கு கிடைத்தது. சென்டர் ஃபீல்ட் பகுதியில் தோம் வடிவிலான ஒரு பொருளை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதில் 8 இடங்களில் இருந்து வெளிச்சம் தோன்றுவதை காணமுடிந்தது. அக்டோபரில் வேற்றுகிரக வாசிகளால் கட்டப்பட்டதாக கூறிய ஒருவரை காவல்துறை கைது செய்தனர். இறுதியாக கடந்த மாதம் நவம்பரில் வானத்தில் ஒரு வித்தியாசமான பிரகாசமான ஒளி காணப்பட்டதாகவும், அதனால் தான் மிகவும் பீதி அடைந்ததாகவும், உள்ளூரில் வசிக்கும் ஒரு நபர் காவல்துறையிடம் கூறியுள்ளார்.
மேலும் வடக்கு அயர்லாந்தின் காவல்துறையை சேர்ந்த செய்தித் தொடர்பாளர் இந்த விவகாரத்தில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் இது கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோன்ற வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருந்தாலும் பறக்கும் தட்டுகள் வானத்தில் விசித்திரமான ஒளி வேற்றுகிரகவாசிகள் பற்றிய பதிவான வழக்குகள் குறித்த தகவல்களை அயர்லாந்து காவல்துறை பராமரித்து வருகிறது.