கொரோனாவுக்கு எதிராக வீட்டிலேயே சிகிச்சை - கைக்கொடுக்கும் மாத்திரை!
23 Dec,2021
பைசர் நிறுவனத்தின் பேக்ஸ்லோவிட் மாத்திரை கொரோனாவுக்கு எதிராக வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதற்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள ”பேக்ஸ்லோவிட்” என்ற மாத்திரைக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் அனுமதி அளித்துள்ளது.
இந்த மாத்திரை கொரோனாவுக்கு எதிராக வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதற்கு உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர வேகமாக பரவும் ஒமிக்ரானுக்கு எதிராகவும் ஆற்றலுடனும் செயல்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டு அபாய கட்டத்தில் இருக்கும் நோயாளிகளையும் மரணத்தில் இருந்து காப்பாற்றும் என்றும் அமெரிக்கா முழுவதும் உடனடியாக மாத்திரைகளை விநியோகிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது ஃபைசர் நிறுவனம்.