ஒமைக்ரானுக்கு எதிராக பைசர், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவு - உலக சுகாதார அமைப்பு தகவல்
19 Dec,2021
தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசான ஒமைக்ரான் உலகை அச்சுறுத்து வருகிறது. 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் நுழைந்து விட்ட இந்த வைரஸ், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் தாக்குகிறது. இதனால் தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசி இந்த புதிய வைரசுக்கு எதிராக செயல்படுமா என்பது கேள்வி குறியாக உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் பைசர் மற்றும் இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனேகா ஆகிய 2 தடுப்பூசிகளும் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக குறைவான செயல்திறனை கொண்டிருப்பது ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் “பைசர் அல்லது அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளின் 2 டோஸ்களுக்குப் பிறகு, டெல்டாவுடன் ஒப்பிடும்போது, ஒமைக்ரானுக்கு எதிரான அவற்றின் செயல்திறன் குறிப்பிடத்தக்க அளவில் குறைவதை இங்கிலாந்தின் ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. இருப்பினும் பைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோசை செலுத்தி கொண்ட 2 வாரங்களுக்குப் பிறகு அதிக செயல்திறன் இருந்தது” என கூறப்பட்டுள்ளது.