இந்தியாவில் பெண்களின் திருமண வயதை உயர்த்துவது விவாதத்துக்குரியதாக மாறியிருக்கும் நிலையில், உலக நாடுகளில் சில வினோதமான திருமண வயது மற்றும் முறைகள் பின்பற்றப்படுகின்றன.
இந்தியாவில் ஆண்களின் சட்டப்பூர்வ திருமண வயது 21 ஆகவும், பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயது 18 ஆகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 21ஆக உயர்த்தும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பெண்ணின் திருமண வயது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க நிதிஆயோக் செயற்குழுவை அமைந்திருந்தது. பெண்களின் உரிமை, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை பிறப்பின் போது இறப்புகள் அதிகரிப்பது போன்ற பல்வேறு காரணிகளை ஆராந்த அந்த குழு தற்போது பெண்ணின் திருமண வயதை 21ஆக அதிகரிக்க பரிந்துரைத்துள்ளது. அந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில் இது நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட உள்ளது. பெண்ணின் திருமண வயது உயர்வதையடுத்து குழந்தை திருமணம் தடை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
இந்தியாவில் பெண்களின் திருமண வயதை உயர்த்துவது விவாதத்துக்குரியதாக மாறியிருக்கும் நிலையில், உலக நாடுகளில் சில வினோதமான திருமண வயது மற்றும் முறைகள் பின்பற்றப்படுகின்றன. குழந்தை திருமணத்தை ஒரு நாடு அங்கீகரித்திருக்கும் நிலையில், ஒரு நாட்டில் 12 வயதில் கூட பெண்களால் திருமணம் செய்து கொள்ள முடிகிறது. உலக நாடுகளால் பின்பற்றப்படும் பெண்களுக்கான திருமண வயது குறித்து தற்போது அறிந்து கொள்வோம்
எஸ்டோனியா - 15 வயதில் பெண்கள் திருமணம் செய்யலாம்
ஐரோப்பாவிலேயே மிகவும் குறைந்த மகளிர் திருமண வயதை கொண்டிருக்கும் நாடு எஸ்டோனியா. இங்கு பெற்றோரின் ஒப்புதலுடன் பெண்கள் 15 வயதிலேயே திருமணம் செய்து கொள்ளலாம்.
பிரிட்டன்:
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயது 18. ஆனால் பெற்றோர் ஒப்புதலுடன் 16 அல்லது 17 வயது பெண்களும் திருமணம் செய்து கொள்ளலாம்
ட்ரினிடாட் டொபாகோ:
கரீபிய தீவு நாடான ட்ரினிடாட் டொபாகோவில் ஆண்கள் மற்றும் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயது 18 ஆக உள்ளது. இங்கு இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் தனி திருமண சட்டம் அமலில் உள்ளது. அதன்படி இஸ்லாமிய பெண்கள் 12 வயதிலும், ஆண்கள் 16 வயதிலும் திருமணம் செய்து கொள்ளலாம். இதே போல இந்து ஆண்கள் 18 வயதிலும், பெண்கள் 14 வயதிலும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
அமெரிக்கா:
அமெரிக்காவில் ஒரு சீராக இல்லாமல் பல்வேறு மாகாணங்களில் வெவ்வேறு விதமாக பெண்களின் திருமண வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில மாகாணங்களில் குறைவாகவும், சில மாகாணங்களில் அதிகமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. massachusetts மாகாணத்தில் நீதிமன்ற அனுமதியுடன் 12 வயதில் பெண்கள் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியும் வில்லங்கமும்.. ஜல்லிக்கட்டு டூ பெங்களூரு விமான நிலையம் வரை
சீனா:
சீனாவில் ஆண்களின் சட்டப்பூர்வ திருமண வயது 22 ஆகவும், பெண்களின் திருமண வயது 20 ஆகவும் உள்ளது. அங்கு திருமண வயதை குறைக்க முயற்சிகள் நடைபெறுகிறது. இருப்பினும் பல்வேறு காரணிகளால் அவை விவாதத்துக்குரியவையாக மாறியிருக்கின்றன.
உலக அளவில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெற்று வரும் நாடாக விளங்குகிறது நைகர். இங்கு 18 வயதுக்கு முன்பாகவே 76% பெண்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். 15 வயதுக்கு குறைவானவர்கள் 28% பேர் திருமணம் செய்துகொள்கின்றனர். அங்கு உள்ள பொருளாதார மற்றும் குழப்பமான சூழல்களால் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.