“சார் ரெண்டு பேர் என்னை கெடுத்துட்டானுங்க
15 Dec,2021
மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த 19-வயது இளம்பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தார் .அதனால் அந்த காதலனை கல்யாணம் செய்து கொள்ள அவர் ஒரு திட்டம் போட்டார் .அவரின் திட்டப்படி அவர் அங்குள்ள காவல் நிலையம் சென்று தான் நடன வகுப்புக்கு இன்று காலை நடந்து சென்றுகொண்டிருந்த போது ஒரு வேனில் 2 நபர்கள் அவர் அருகே விலாசம் கேட்பது போல வந்து, தன்னை வேனுக்குள் தூக்கிப்போட்டுக் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக புகார் கூறினார் .
அதை கேட்ட போலீசார் தனிப்படை அமைத்து அந்த பெண் கூறிய பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்தனர் .
அப்போது அவர் கூறிய சம்பவம் எதுவும் அந்த கேமராவில் பதிவாகவில்லை .மாறாக அந்த பெண் நடந்து போவது மட்டும்தான் இருந்துள்ளது .இதனால் சந்தேகப்பட்ட போலீஸ் அந்த பெண்ணை துருவி துருவி விசாரித்தனர் .அப்போது அந்த பெண் தனக்கு கெடுத்தவரையே கல்யாணம் செய்து கொடுப்பார்கள் என்பதால் இப்படி தன்னை ஒருவர் கெடுத்ததாக பொய் சொன்னதாக கூறினார் .இதனால் போலீசார் அதிர்ச்சியாகி அவரை விசாரித்து வருகின்றனர் .