57 வயதில் 3-வது மனைவி மூலம் 7-வது குழந்தைக்கு தந்தையான இங்கிலாந்து பிரதமர்..!

11 Dec,2021
 

 
 
 
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் - கேரி தம்பதிக்கு 2-வது பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன், கடந்த 2019 ஜூலையில் பிரிட்டன் பிரதமராக பொறுப்புக்கு வந்தார். அவர் அதற்கு முன்பாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர், லண்டன் மேயர் உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
 
 
போரிஸ் ஜான்சனின் முதல் மனைவி மோன்ஸ்டின் ஓவன் 1993-ல் காலமானார். அவருக்கும் போரிஸ் ஜான்சனுக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் பிரபல வழக்கறிஞர் மரினா வீலரை 1993-ல் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி 2020-ல் விவாகரத்து பெற்றது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் மனைவி மெரினா வீலர்-போரிஸ் ஜான்சன் தம்பதிக்கு, ‘லாரா லெட்டிஸ்(27), மிலோ ஆர்தர்(25), காசியா பீச்(23) மற்றும் தியோடர் அப்பல்லோ(21)’ ஆகிய 4 குழந்தைகள் பிறந்தனர்.
 
2009ம் ஆண்டு கலை ஆலோசகராக செயல்பட்ட ஹெலன் மெக்கிண்டயர் என்ற பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருந்தது. இந்த தொடர்பால், இருவருக்குமிடையே ‘ஸ்டெபானி மேகிண்டயர்’ என்ற ஒரு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. 
 
இதற்கிடையே, 2019 இறுதியில், தனக்கும் அரசியல் செயற்பாட்டாளர் கேரிக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக போரிஸ் ஜான்சன் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். திருமணத்திற்கு முன்பாகவே இந்த ஜோடிக்கு 2020 ஏப்ரலில் மகன் பிறந்தார். கடந்த மே மாதம் போரிஸ் ஜான்சனும், கேரியும் கத்தோலிக்க முறைப்படி எளிமையாக திருமணம் முடித்துக் கொண்டனர்.
 
இந்நிலையில் போரிஸ் - கேரி தம்பதிக்கு லண்டன் தேசிய அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. 
 
ஒமைக்ரான் வைரஸ் பிரிட்டனில் பரவி வருவதால், ஜான்சன் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். அவர் கொரோனா வைரஸ் பரவலையும் சரியாக கையாளவில்லை என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில், அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் நடந்திருக்கிறது. தாயும், சேயும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இங்கிலாந்து பிரதமருக்கு எத்தனை குழந்தைகள் என்ற யூகம் பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருந்தது. இதுதொடர்பாக கடந்த செப்டம்பரில் நடந்த நேர்காணலின்போது பதில் அளித்த போரிஸ் ஜான்சன், மொத்தம் தனக்கு 6 குழந்தைகள் இருப்பதாக கூறினார். இத்துடன் அந்த எண்ணிக்கை 7ஆக மாறியுள்ளது.
 
இங்கிலாந்து பிரதமராக பொறுப்பு வகிக்கும் நபர், பிரதமராக பதவியில் இருக்கும்போது 5 குழந்தைகளை பெற்ற நிகழ்வு 170 ஆண்டுகளுக்கு பின் இப்போது தான் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
புதிதாக பிறந்த குழந்தையுடன் சேர்த்து மொத்தம் 8 குழந்தைகளுக்கு தந்தையாக போரிஸ் ஜான்சன் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த செய்தியை அவர் உறுதி செய்யவில்லை. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிறந்த மூத்த மகளுக்கு தற்போது 27 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies