ஜெர்மனியின் பிரதமராக ஓலப் ஸ்கோல்ஸ் தேர்வு
10 Dec,2021
பெர்லின்:ஜெர்மனியின் புதிய பிரதமராக சமூக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஓலப் ஸ்கோல்ஸ், 63, தேர்வு செய்யப்பட்டார்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் 'பன்ட்ஸ்டாக்' எனப்படும் பார்லிமென்ட்டின் 20வது மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது.இதில் சமூக ஜனநாயக கட்சிக்கு 25.9 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் யூனியன் பிளாக் கட்சி 24.1 சதவீத ஓட்டுகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
இந்நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சமூக ஜனநாயக கட்சி ஆட்சியை பிடித்தது. ஏஞ்சலா மெர்கல் தலைமையிலான கூட்டணி அரசில் துணை பிரதமர் மற்றும் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்த ஓலப் ஸ்கோல்ஸ் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்க ப்பட்டு உள்ளார்.மொத்தமுள்ள 736 இடங்களில், ஆளும் கூட்டணிக்கு 416 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஜெர்மனி பார்லி.,யில் நடந்த ஓட்டெடுப்பில், ஓலப் ஸ்கோல்ஸ் புதிய பிரதமராக தேர்வானார்.